/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தொடரும் பனியால் மல்லிகை பூக்கள் விளைச்சல் பாதிப்பு
/
தொடரும் பனியால் மல்லிகை பூக்கள் விளைச்சல் பாதிப்பு
தொடரும் பனியால் மல்லிகை பூக்கள் விளைச்சல் பாதிப்பு
தொடரும் பனியால் மல்லிகை பூக்கள் விளைச்சல் பாதிப்பு
ADDED : பிப் 17, 2025 05:05 AM
ஆண்டிபட்டி : பகலில் வெயில், இரவில் பொழியும் பனியால் ஆண்டிபட்டி பகுதியில் மல்லிகை பூக்கள் விளைச்சலில் பாதிப்பு தொடர்கிறது.
ஆண்டிபட்டி பகுதியில் திம்மரசநாயக்கனுார், பொம்மிநாயக்கன்பட்டி, டி.சுப்புலாபுரம், ராஜகோபாலன்பட்டி, கன்னியப்ப பிள்ளைபட்டி, கொத்தப்பட்டி, மாயாண்டிபட்டி, கதிர்நரசிங்கபுரம் உட்பட பல கிராமங்களில் மல்லிகைப் பூக்கள் சாகுபடி ஆகிறது. கடந்த சில மாதங்களில் பெய்த மழை அதனை தொடர்ந்து பொழியும் பனியால் மல்லிகைச் செடிகளில் விளைச்சல் பாதித்தது. கடந்த சில வாரங்களாக மழைக்கான சூழல் மாறிய பின் பனியின் தாக்கம் கூடுதலாக உள்ளது. இதனால் மல்லிகை செடிகளில் பூக்கள் எடுப்பதில்லை. விளைச்சல் இன்றி விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பூ வியாபாரிகள் கூறியதாவது: மழை, பனி காலங்களில் மல்லிகைச் செடிகளில் விளைச்சல் குறையும். விளையும் பூக்களும் அளவில் திரட்சியாக இருக்காது. இதனால் வாசனை குறையும். தற்போது ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டிற்கு 10 முதல் 20 கிலோ அளவில் மல்லிகை பூக்கள் வரத்து உள்ளது.
கிலோ ரூ.1000 முதல் 1500 வரை விற்பனை ஆகிறது. பனியின் தாக்கம் இன்னும் சில வாரங்களில் குறைந்த பின் மல்லிகை பூக்கள் வரத்து அதிகமாகும்.
சீசன் காலங்களில் ஆண்டிபட்டி மார்க்கெட்டிற்கு தினமும் 2 முதல் 5 டன் வரை வரத்து இருக்கும். வரத்து அதிகமானால் சென்ட் தயாரிப்பு கூடங்களுக்கு அனுப்பப்படும். இவ்வாறு கூறினர்.