தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/மல்லிகை கிலோ ரூ.1500

மல்லிகை கிலோ ரூ.1500

மல்லிகை கிலோ ரூ.1500


ADDED : நவ 19, 2026 07:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 19, 2026 07:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: வரத்து குறைவால் மல்லிகை பூ விலை கிலோ ரூ.1500க்கு விற்பனையானது.

தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் பூ மார்க்கெட்டில் இன்று (நவ.,19) மல்லிகை ரூ.1500, முல்லை ரூ.600, ஜாதிமல்லி ரூ.400, செவ்வந்தி ரூ.780, செண்டு பூ ரூ.70–80, சம்மங்கி ரூ.150–200, பன்னீர்ரோஸ் ரூ.150, பட்டன் ரோஸ் ரூ.200, துளசி கட்டு ரூ.30க்கு விற்பனையானது. நேற்று (நவ.,18) ரூ.ஆயிரத்திற்கு விற்பனையான மல்லிகை ஒரே நாளில் ரூ.500 அதிகரித்து ரூ.1500க்கு விற்பனையானது.

இது பற்றி பூ வியாபாரி கண்ணன் கூறுகையில், ‘பனி காலம் துவங்கி உள்ளதால் மல்லிகை பூ வரத்து குறைய துவங்கி உள்ளது. அதே நேரம் தேவை அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் மேலும் விலை அதிகரிக்கும். மற்ற பூக்கள் விலை பெரிய அளவில் மாறுபாடு இருக்காது ,’என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us