ADDED : ஜூன் 07, 2025 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி தேவர் காலனி ரங்கநாதன் நகரில் வசிப்பவர் ரமேஷ் 49. அரசு போக்குவரத்து கழக டிரைவர்.
இவர் இரண்டு நாட்களுக்குமுன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் உறவினர் திருமணத்திற்கு வெளியூர்சென்றுள்ளார்.நேற்று காலையில் வீட்டுக்கு வந்து பார்த்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.உள்ளே சென்று பார்த்ததில் பீரோவில் இருந்த 4 கிராம் தங்க தாயத்து காணாமல் போனது.ரமேஷ் புகாரில் போடி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.