/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேசிய வேலை உறுதி திட்டத்தில் பணி ஒதுக்கீடு இன்றி வேலை இழப்பு
/
தேசிய வேலை உறுதி திட்டத்தில் பணி ஒதுக்கீடு இன்றி வேலை இழப்பு
தேசிய வேலை உறுதி திட்டத்தில் பணி ஒதுக்கீடு இன்றி வேலை இழப்பு
தேசிய வேலை உறுதி திட்டத்தில் பணி ஒதுக்கீடு இன்றி வேலை இழப்பு
ADDED : அக் 02, 2024 07:18 AM
கம்பம் : ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி ஒதுக்கீடு இல்லாததால் தொழிலாளர்கள் வேலை இழப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.
இந்தியா முழுவதும் கிராமங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் அமல் படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் ஒவ்வொரு ஊராட்சியிலும் நூற்றுக் கணக்கில் இந்த திட்டத்தின் கீழ் வேலை செய்தனர். சிறு குளங்கள், ஊருணிகள் தூர் வாருவது, மயான சாலை சீரமைப்பது, உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.கடந்த சில ஆண்டுகளாக பணிகள் செய்து வருவதால் தற்போது திட்ட பணிகள் ஏதும் இல்லை. எனவே ஒவ்வொரு ஊராட்சியிலும் இந்த திட்டத்தின் கீழ் பணியாற்ற விரல் விட்டு எண்ணக் கூடிய அளவு தான் பணியாளர்கள் வருகின்றனர்.
ஊராட்சி செயலர்கள் கூறுகையில், கிராமங்களில் அரசின் நிபந்தனைகள் படி பணிகள் முடிந்து விட்டது.
தற்போது பணிகள் இல்லாததால் ஒவ்வொரு ஊராட்சியிலும் 10 பேர்களுக்குள் தான் பணி செய்து வருகின்றனர்.
நிபந்தனைகளை தளர்த்தி அரசு உத்தரவிட்டால் , வேறு பணிகள் செய்ய கூடுதல் தொழிலாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்கின்றனர்.

