/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வேலை வாய்ப்பு முகாம்: கலெக்டர் முகம் சுளிப்பு
/
வேலை வாய்ப்பு முகாம்: கலெக்டர் முகம் சுளிப்பு
ADDED : மே 31, 2025 12:40 AM
உத்தமபாளையம்,: உத்தமபாளையம் நகர் நல கமிட்டி சார்பில் இங்குள்ள கிரசன்ட் பள்ளியில் நேற்று நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்ற கலெக்டர் தன்னை புகழ்வதை தவிர்க்க கூறி வெளியேறினார்.
கிரசன்ட் மெட்ரிக் பள்ளியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் கலெக்டர் ரஞ்ஜீத் சிங் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பேசிய நகர் நலக் கமிட்டியினர் கலெக்டரை துதி பாடியும், நகர் நல கமிட்டியின் பணிகளை விளம்பரப்படுத்துவது போன்றும் பேசியுள்ளனர்.
இதனால் முகம் சுளித்த கலெக்டர், இது தனியார் நடத்தும் நிகழ்ச்சி. அரசு துறைகள், அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். கலெக்டரின் நேரத்தை வீணடிக்க கூடாது.
உங்களை புகழ்வதையும், என்னை புகழ்வதையும் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் பயன்படும் வகையில் நிகழ்ச்சி இருக்க வேண்டும்.
தேவையில்லாத விசயங்களை பேச கூடாது என்று கூறி விட்டு முகாமில் இருந்து வெளியேறினார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.