sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 வாழ்வில் இன்பமும், துன்பமும் நாணயத்தின் இரு பக்கங்கள் இணை ஆணையர் ஜெயசீலன் பேச்சு

/

 வாழ்வில் இன்பமும், துன்பமும் நாணயத்தின் இரு பக்கங்கள் இணை ஆணையர் ஜெயசீலன் பேச்சு

 வாழ்வில் இன்பமும், துன்பமும் நாணயத்தின் இரு பக்கங்கள் இணை ஆணையர் ஜெயசீலன் பேச்சு

 வாழ்வில் இன்பமும், துன்பமும் நாணயத்தின் இரு பக்கங்கள் இணை ஆணையர் ஜெயசீலன் பேச்சு


ADDED : டிச 28, 2025 05:39 AM

Google News

ADDED : டிச 28, 2025 05:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: ''வாழ்வில் இன்பமும், துன்பமும் நாணயத்தின் இருபக்கங்கள்'' என, சென்னை மாநகராட்சி சுகாதார இணை ஆணையர் ஜெயசீலன் புத்தக திருவிழாவில் பேசினார்.

தேனியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்து வரும் புத்தக திருவிழாவின் 5ம் நாள் நிகழ்விற்கு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., ராஜகுமார், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., செய்யது முகமது, பி.ஆர்.ஓ., நல்லதம்பி, மகளிர்திட்ட இயக்குநர் சந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை மாநகராட்சி சுகாதார இணை ஆணையர் பேசியதாவது: மனிதன் தவறு செய்வது இயல்பு, அதனை திருத்திக் கொள்ள வாய்ப்பு வழங்குவது பற்றி மணிமேகலை காப்பியம் கூறுகிறது. வாழ்வில் இன்பமும் துன்பமும் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது. அதில் இன்பத்தை மட்டும் எடுத்துக்கொள்வது புத்திசாலித்தனம்.

இதனை புறுநானுாறில் குறிப்பிட்டுள்ளனர். மனிதன் தன்னால் தவறவிடப்பட்ட வாய்ப்புகளை நினைத்து குற்ற உணர்ச்சியுடன் மடிகிறான். மயானம் இறந்தவருக்கு நிம்மதியை தருகிறது. இறுதி சடங்கில் பங்கேற்றவர்களுக்கு சிறிது ஞானத்தை வழங்குகிறது.விருதுநகரில் கலெக்டராக இருந்த போது சர்வே செய்தோம். மகளிர் சுயஉதவிக்குழுவிற்கு வழங்கும் கடன் தொகையை 40 சதவீதம் பேர், தொழில் முதலீடாக பயன்படுத்துகின்றனர். சிலர் நகைகள் வாங்குகின்றனர். மீண்டும் அதனை சீர், செய்முறை, மருத்துவச் செலவு, கல்விக்காக அடகு வைக்கின்றனர். அவ்வாறு அடகு வைக்கப்படும் நகைகளில் பெரும்பாலானவை மீட்கப்படுவதே இல்லை என்பது வரலாறு என்றார்.






      Dinamalar
      Follow us