/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முதியோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாடிய நீதிபதிகள்
/
முதியோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாடிய நீதிபதிகள்
ADDED : அக் 31, 2024 03:01 AM

போடி: போடி அருகே தர்மத்துப்பட்டி ஏ.எச்.எம்., டிரஸ்டில் முதியோர் தினம், தீபாவளி கொண்டாட்டம் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அறிவொளி தலைமையில் நடந்தது. மாவட்ட நீதிமன்ற நீதிபதி அனுராதா, குற்றவியல் நீதித்துறை நீதிபதி கவிதா, சார்பு நீதிபதிகள் பரமேஸ்வரி, கீதா, போடி சப் கோர்ட் நீதிபதி சுலைமான் ஹுசைன் மாவட்ட முன்சீப் கண்ணன், மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் சந்தானகிருஷ்ணன், மாவட்ட தலைமை நீதிமன்ற நிர்வாக அலுவலர் ரவிக்குமார் முன்னிலை வகித்தனர்.
டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் முகமது சேக் இப்ராஹிம் வரவேற்றார்.
விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி அறிவொளி உள்ளிட்ட நீதிபதிகள் பலர் கலந்து கொண்டு ஆதரவற்ற முதியோர்கள், குழந்தைகளுக்கு இனிப்புகள், புத்தாடைகள் வழங்கினர். அதன் பின் குழந்தைகளுடன் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடினர். டிரஸ்ட் இயக்குனர் ஸ்டெல்லா, திட்ட இயக்குனர் மஞ்சு, டாக்டர் தேசாய் உட்பட பலர் பங்கேற்றனர்.