/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
க. புதுப்பட்டியில் 20 பேருக்கு நாய்க்கடி
/
க. புதுப்பட்டியில் 20 பேருக்கு நாய்க்கடி
ADDED : நவ 20, 2024 06:56 AM
கம்பம் : க.புதுப்பட்டி பேரூராட்சியில் சில நாட்களில் 20க்கும் மேற்பட்டோர் நாய் கடி பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர்.
மாவட்டத்தில் ஒராண்டிற்கும் மேலாக தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 200 தெருநாய்கள் உலா வருகிறது. இதில் வெறிநோய் பாதித்த நாய்களும் திரிந்தன. நாய் கடியால் பாதித்த பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெற வந்தனர். கலெக்டர் ஷஜீவனா உத்தரவின்பேரில் கடந்தாண்டு ஒரு சில நகராட்சிகளில் மிக குறைந்த எண்ணிக்கையில் தெருநாய்களுக்கு கருத்தடை ஆப்பரேஷன் நடந்தது. சில நாட்களிலேயே அந்த நடவடிக்கை முடங்கியது.
சமீபத்தில் மீண்டும் தெரு நாய்களின் தொல்லை அதிகரிக்க துவங்கியது. க.புதுப்பட்டி பேரூராட்சியில் கடந்த 2 நாட்களில் 20க்கும் மேற்பட்டவர்கள் நாய் கடியால் பாதிக்கப்பட்டனர். பேரூராட்சியில் நாய்களை கண்டாலே மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சின்னமனூர் நகராட்சியில் 210 தெரு நாங்கள் உள்ளதாகவும், முதற்கட்டமாக 50 தெருநாய்களுக்கு கருத்தடை ஆப்பரேஷன் செய்ய அதற்கான மருந்து, ஊசிகள் வாங்கப்பட்டது. ஆனால் இதுவரை அதற்கான பணிகள் துவங்கவில்லை , மற்ற நகராட்சிகளிலும் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.