/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பொறியியல் கல்லுாரிகளுக்கு இடையேயான கபடி போட்டி
/
பொறியியல் கல்லுாரிகளுக்கு இடையேயான கபடி போட்டி
ADDED : செப் 20, 2025 11:55 PM

ஆண்டிபட்டி:அண்ணா பல்கலை மண்டலங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான கபடி போட்டி ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் நடந்தது.
வெவ்வேறு மண்டலங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரியில் இருந்து மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
துவக்க விழா நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகத் தலைவர் மோகன் தலைமை வகித்தார். துணை தலைவர்கள் பிரசன்ன வெங்கடேசன், ரேணுகா, சுதாமீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டிகளை கல்லூரி முதல்வர் முனைவர் அருள் குமார் துவக்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினர்களாக அண்ணா பல்கலை விளையாட்டு கழக தலைவர் செந்தில்குமார், செயலாளர் பாலகுமரன், ஆண்டிபட்டி டி.எஸ்.பி., சிவசுப்பு, மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவகுமார், தமிழ்நாடு பால் பேட் மிட்டன் மண்டல செயலாளர் விஜய் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.
போட்டிகளில் சென்னை புனித ஜோசப் பொறியியல் கல்லூரி மாணவர்கள் முதலிடம், கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி 2ம் இடம், லயோலா கல்லூரி 3ம் இடம், காரைக்குடி ராஜராஜன் பொறியியல் கல்லூரி 4ம் இடம் பெற்றனர். போட்டி ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் சிவா, மேலாளர் நாகேந்திரன், துணைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.