ADDED : பிப் 18, 2025 05:46 AM

பெரியகுளம்: கைலாசபட்டி கைலாச நாதர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி விமான பாலாலய பூஜையில் முன்னாள் முதல்வர் ஓ.பனனீர்செல்வம் பங்கேற்றார்.
பெரியகுளம் அருகே கைலாசபட்டி மலைக்கோயில் கைலாசநாதர் கோயில் உள்ளது.
பிரதோஷம், பவுர்ணமி, மகாசிவராத்திரி, கார்த்திகை தீபம் உட்பட அனைத்து விசேஷ வைபவங்களும் நடந்து வருகிறது.
இக்கோயிலில் 2012ல் கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்துவதற்கு திருப்பணிகள் துவங்க, நேற்று விமான பாலாலய பூஜை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது.
அர்ச்சகர் ராஜா சிறப்பு பூஜைகள் செய்தார். செயல் அலுவலர் சுந்தரி, ஆய்வாளர் தனலட்சுமி, அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு சிறப்பு ஆலோசகர் ஜெயபிரதீப், தலைவர் நாராயணன், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் விஜயராணி உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

