/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேக விழா
/
கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேக விழா
ADDED : ஆக 30, 2025 04:33 AM

பெரியகுளம்: கைலாசநாதர் மலைக்கோயில் கும்பாபிஷேகம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொடியசைக்க, கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கோலாகலமாக நடந்தது.
பெரியகுளம் கைலாசபட்டியில் மலைமேல் கைலாசநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் கைலாசநாதர், பெரியநாயகி அம்மன், நந்தீஸ்வரர், விநாயகர், பாலசுப்பிரமணியர், பரிவார தெய்வங்கள் உள்ளன. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மேற்பார்வையில் திருப்பணிகள் நடந்தது. பணிகள் முடிந்த நிலையில், 12 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கும்பாபிஷேகம் விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொடியசைக்க, பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோயில் விமானங்கள், ராஜகோபுரத்திற்கு புனித நீரை அர்ச்சகர்கள் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது.
நகராட்சி முன்னாள் தலைவர் ஓ.ராஜா, குருதட்சிணாமூர்த்தி அறக்கட்டளை ஆலோசகர் சரவணன், டாக்டர் முத்துக்குகன், முன்னாள் கவுன்சிலர் ராஜகோபால், செயல் அலுவலர் சுந்தரி உட்பட பலர் பங்கேற்றனர்.
அர்ச்சகர் ராஜா கும்பாபிஷேகம், பூஜைகள் நடத்தினார். அன்பர் பணி செய்யும் பராமரிப்புக் குழு ஆலோசகர் ஜெயபிரதீப், தலைவர் நாராயணன், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் விஜயராணி, ஆன்மிக பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.