/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காளாத்தீஸ்வரர் கோயில் தெப்பம் சீரமைப்பு பணியில் தொய்வு
/
காளாத்தீஸ்வரர் கோயில் தெப்பம் சீரமைப்பு பணியில் தொய்வு
காளாத்தீஸ்வரர் கோயில் தெப்பம் சீரமைப்பு பணியில் தொய்வு
காளாத்தீஸ்வரர் கோயில் தெப்பம் சீரமைப்பு பணியில் தொய்வு
ADDED : பிப் 01, 2024 04:05 AM
உத்தமபாளையம், : உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் திருப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தெப்பத்தை புதுப்பிக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானம்பிகை கோயில் புராதானமானது. தென் காளஹஸ்தி என்றழைக்கப்படும் இந்த கோயில் காலசர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலமாகவும் உள்ளது. ராகு, கேது தம்பதி சகிதமாக தனித் தனிக் கோயில்களில் எழுந்தருளியுள்ளனர். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ராகு காலத்தில் மாலை 4:30 முதல் 6:00 மணி வரை இங்கு நடக்கும் சிறப்பு பூஜையில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து பங்கேற்கின்றனர்.
இந்த கோயில் திருப்பணி வேலைகள் சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. தெப்பத்தை புதுப்பிக்க அரசு சார்பில் ரூ.21 லட்சம் வழங்கப்பட்டது. அந்த நிதி போதுமானதாக இல்லை. ஒப்பந்தகாரர் சொந்த நிதியை செலவழித்தும் பணிகளை செய்துள்ளார். இருந்த போதும் தெப்பத்தை புதுப்பிக்கும் பணிகள் முழுமை அடையவில்லை. தெப்பத்தை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க ஹிந்து சமய அறநிலைய துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து செயல் அலுவலர் இளஞ்செழியன், மரங்களின் வேர் தெப்பத்தின் பழைய சுவரை சேதப்படுத்தியது. தற்போது 20 அடி நீளத்திற்கு ஆர்.சி. போட்டு சுவர் எழுப்பி வருகிறோம். பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். என்றார்