/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்ட வாலிபால் போட்டி கள்ளர் மேல்நிலைப்பள்ளி வெற்றி
/
மாவட்ட வாலிபால் போட்டி கள்ளர் மேல்நிலைப்பள்ளி வெற்றி
மாவட்ட வாலிபால் போட்டி கள்ளர் மேல்நிலைப்பள்ளி வெற்றி
மாவட்ட வாலிபால் போட்டி கள்ளர் மேல்நிலைப்பள்ளி வெற்றி
ADDED : செப் 10, 2025 02:15 AM

சின்னமனூர் : தேனியில் நடந்த மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வாலிபால் போட்டியில் வெள்ளையம்மாள்புரம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்றனர்.
தேனியில் தமிழக முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் வாலிபால் போட்டிகளில் 21 அரசு பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் பங்கேற்றுள்ளன. வாலிபால் போட்டியில் 6 ம் வகுப்பு முதல் பிளஸ் படிக்கும் மாணவ மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.
மாணவிகளுக்கான இறுதி போட்டி வைகைஅணை வள்ளி வரதராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணியும், வெள்ளையம்மாள்புரம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி அணிகள் மோதியது. இதில் வெள்ளையம்மாள்புரம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தலைமையாசிரியர் உத்தண்ட லட்சுமி பாராட்டி பரிசுகள் வழங்கினார். பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர் முருகனும் கவுரவிக்கப்பட்டார்.