/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விபத்தில் 3 கல்லுாரி மாணவர்கள் பலி: சுற்றுலா பஸ் டிரைவர் கைது
/
விபத்தில் 3 கல்லுாரி மாணவர்கள் பலி: சுற்றுலா பஸ் டிரைவர் கைது
விபத்தில் 3 கல்லுாரி மாணவர்கள் பலி: சுற்றுலா பஸ் டிரைவர் கைது
விபத்தில் 3 கல்லுாரி மாணவர்கள் பலி: சுற்றுலா பஸ் டிரைவர் கைது
ADDED : பிப் 21, 2025 06:11 AM

மூணாறு: மூணாறு அருகே பஸ் விபத்தில் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் பலியான சம்பவத்தில் கன்னியாகுமரியைச் சேர்ந்த சுற்றுலா பஸ் டிரைவர் வினேஸ் 33, போலீசார் கைது செய்தனர்.
தமிழகம் நாகர்கோவில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்யூட்டர் சையன்ஸ் இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவிகள், ஆசிரியைகள் உள்பட 41 பேர் கொண்ட குழு நேற்று முன்தினம் மூணாறுக்கு பஸ்சில் சுற்றுலா வந்தனர். கன்னியாகுமரியைச் சேர்ந்த டிரைவர் வினேஸ்  பஸ்சை ஓட்டினார்.
மாட்டுபட்டி அணையை பார்த்து விட்டு குண்டளை அணையை நோக்கி சென்ற போது எக்கோ பாய்ண்ட் பகுதியில் பஸ் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. அந்த விபத்தில் மாணவிகள்  ஆதிகா 19, வேணிகா 19, மாணவர் சுதன் 19, ஆகியோர் இறந்தனர். எஞ்சியவர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர்.அதி வேகம் பஸ் விபத்துக்கு காரணம் என தெரிய வந்தது. இதனிடையே டிரைவர் வினேஸ் தலைமறைவானார்.
மூணாறு இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் வினேஸை தேடி வந்த நிலையில், அவரை நேற்று கைது செய்தனர். அவர் மீது அதி வேகமாகவும், அலட்சியமாகவும் பஸ் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்தனர்.

