/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காமராஜர் பிறந்த நாள் விழா கோலாகலம் பள்ளி, கல்லுாரிகளில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்
/
காமராஜர் பிறந்த நாள் விழா கோலாகலம் பள்ளி, கல்லுாரிகளில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்
காமராஜர் பிறந்த நாள் விழா கோலாகலம் பள்ளி, கல்லுாரிகளில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்
காமராஜர் பிறந்த நாள் விழா கோலாகலம் பள்ளி, கல்லுாரிகளில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்
ADDED : ஜூலை 16, 2025 06:54 AM

தேனி : தேனி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா, கல்வி வளர்ச்சி நாளாக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தேனி மாவட்ட வர்த்தக காங்கிரஸ் சார்பில், காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி தின விழாவாக தேனி, தாமரைக்குளம், பெரியகுளம், சின்னமனுார், கம்பம் ஆகிய ஊர்களில் நடந்தது. இப்பகுதிகளில் உள்ள காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்பு வழங்கினர். மாவட்டத் தலைவர் சங்கரநாராயணன் தலைமை வகித்தார். காமராஜ் பவனில் காமராஜர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாநில செயலாளர் மனோகரன், மாவட்டச் செயலாளர்கள் கண்ணுச்சாமி, மெல்வின், பெரியகுளம் வட்டாரத் தலைவர் கஜேந்திரன், செயலாளர் துடிவீரன் உள்பட பலர் பங்கேற்றனர். நிகழ்வில் த.மா.க,கட்சியில் இருந்து பெரியகுளம் ஷாஜகான், தாமரைக்குளம் ராம்குமார் வர்த்தக காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
ஆர்.எஸ்., மெட்ரிக் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி நிறுவனத் தலைவர் சங்கரநாராயணன் தேசிய கொடி ஏற்றினார். பள்ளிச் செயலாளர் ராஜேந்திரபிரசாத், உறவின்முறை தலைவர் கோவிந்தசாமி, செயலாளர் காந்திராஜன், பொருளாளர் பாண்டி பங்கேற்றனர்.
தேனி மேலப்பேட்டை அனைத்து கல்வி நிறுவனங்கள் சார்பில் நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது. உறவின் முறைத்தலைவர் தர்மராஜன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஜீவகன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். பள்ளி வளாகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மினி மாரத்தான் போட்டியை ஏ.டி.எஸ்.பி., கலைக்கதிரவன் துவக்கி வைத்தார். ரத்ததான முகாமை கலெக்டர் ரஞ்ஜீத்சிங் துவக்கி வைத்தார்.
தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி செயலாளர் ஸ்ரீநிவாசன் தலைமை வகித்தார். இணைச்செயலாளர் ரமேஷ், கண்ணன் முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. பள்ளி முதல்வர் பிரியதர்ஷினி, துணை முதல்வர்கள் முருகன், ராம்குமார், ஆசிரியர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
அல்லிநகரம் பாக்யா மெட்ரிக் பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி கல்வி சங்க செயலாளர் பாக்கியகுமாரி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் பரந்தாமன் முன்னிலை வகித்தார். காமராஜர் உருவ படத்திற்கு மரியாதை செய்யப்பட்டது.
போடி: திருமலாபுரம் நாடார் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா தலைமையாசிரியர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது. மெர்கண்டைல் பாங்க் முதன்மை மேலாளர் கார்த்திகேயன் கொடி ஏற்றினார். ஆசிரியர் பழனிச்சாமி வரவேற்றார். அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு முன்னாள் ஆசிரியர் மாரியப்பன் நினைவாக பரிசுகள் வழங்கப்பட்டன.
போடி ஸ்ரீ காமராஜ் வித்யாலயா பள்ளியில் தாளாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடந்தது. செயலாளர் உஷா எல்லம்மாள், தலைமையாசிரியர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு போடி சேவா அறக்கட்டளை நிறுவனர் முத்து விஜயன், செயலாளர் கலைச்செல்வி, உரத்த சிந்தனை பொருளாளர் சீனிவா.போடி நகர காங்., சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா நகர தலைவர் முசாக் மந்திரி தலைமையில் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் சன்னாசி, நகர பொதுச் செயலாளர் அரசகுமார், இளைஞரணி செயலாளர் வினோத் குமார், நகர செயலாளர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினர்.
ஆண்டிபட்டி: காமராஜர் பிறந்த நாள் விழா காங்., வட்டார தலைவர் ரவி தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். எம்.பி., தங்கதமிழ்செல்வன், எம்.எல்.ஏ., மகாராஜன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராஜாராம், நகர செயலாளர் சரவணன், நகர் காங்.,தலைவர் சுப்புராஜ், தொகுதி பொறுப்பாளர் சின்னப்பாண்டி, நகர் செயலாளர் ராஜாராம், துணைத் தலைவர் வேல்மணி, முன்னாள் வட்டார தலைவர் ராஜேஷ் கண்ணன், வழக்கறிஞர் மலைமுருகன் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்.
பெரியகுளம்: நெல்லையப்பர் நடுநிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி செயலர் முத்து மாணிக்கம் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். போட்டிகள் நடத்தப்பட்டது. ஆசிரியை தேவப்பிரியா பரிசுகள் வழங்கினார். ஆசிரியை முத்துமணி நன்றி கூறினார். அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியை பேபி தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர் தனபாலன் முன்னிலை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரமணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரேகா, உறுப்பினர் வெங்கடேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.