/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பம் சக்தி விநாயகர் மெட்ரிக் பள்ளி சாதனை
/
கம்பம் சக்தி விநாயகர் மெட்ரிக் பள்ளி சாதனை
ADDED : மே 18, 2025 03:19 AM

கம்பம்: கம்பம் சக்தி விநாயகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்று சாதனை செய்துள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கம்பம் சக்தி விநாயகர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவி தேஜஸ்வினி 500 க்கு 496 மதிப்பெண்கள் பெற்று தேனி மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்தார்.
ஹருன் 482 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் இரண்டாம் இடத்தையும், மாதேஷ் 481 பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
அறிவியல் 2 பேர், சமூக அறிவியல் 3 பேர், கணிதம் ஒருவர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றனர். தேர்வு எழுதிய 46 பேர்களும் தேர்ச்சி பெற்று நூறு சதவீத தேர்ச்சி பெற்றனர்.
480 க்கு மேல் 3 பேர்களும், 450 க்கு மேல் 8 பேர், 400 க்கு மேல் 27 பேர் மதிப்பெண் பெற்றனர்.
மாவட்ட அளவில் இரண்டாம் இடம் மற்றும் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளை தாளாளர் அச்சுத நாகசுந்தர் பாராட்டி பரிசுகள் வழங்கினார். உடன் முதல்வர் கருப்பசாமி மற்றும் ஆசிரியர்கள் இருந்தனர்.