/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பம் வீதிகளில் ஆக்கிரமிப்பால் அவதி
/
கம்பம் வீதிகளில் ஆக்கிரமிப்பால் அவதி
ADDED : டிச 22, 2024 09:17 AM
கம்பம் : கம்பம் நகராட்சியில் பல வீதிகளில் நடக்க முடியாத அளவிற்கு நிலைமை உள்ளது.
கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. மக்கள் தொகை 70 ஆயிரத்திற்கு மேல் உள்ளது. நகரில் ஆக்கிரமிப்புக்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் காந்திஜி வீதி, வேலப்பர் கோயிலில் இருந்து வடக்கில் செல்லும் வீதி, உழவர் சந்தை வீதி, பார்க் ரோடு, கமிஷனர் குடியிருப்பு அருகில் என பல இடங்களில் பொதுமக்கள் நடக்க கூடியாத அளவிற்கு ஆக்கிரமிப்புகள் உள்ளன.
சமீபத்தில் இந்த பகுதிகளில் ஆக்கிரமிப்புக்கள் அகற்றுவதாக நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால் அவர்கள் சென்ற மறுநாளே மீண்டும் அதே நிலை தான் உள்ளது. எனவே, மக்கள் நடப்பதற்கும், வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தி தர நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.