/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மரக்கன்றுகள் நட மாணவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி சூழல் பாதுகாப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கம்பம் நாலந்தா பள்ளி
/
மரக்கன்றுகள் நட மாணவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி சூழல் பாதுகாப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கம்பம் நாலந்தா பள்ளி
மரக்கன்றுகள் நட மாணவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி சூழல் பாதுகாப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கம்பம் நாலந்தா பள்ளி
மரக்கன்றுகள் நட மாணவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி சூழல் பாதுகாப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கம்பம் நாலந்தா பள்ளி
ADDED : பிப் 05, 2024 12:11 AM
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தற்போது கம்பத்தில் களம் இறங்கி உள்ளன. நந்தகோபாலசாமி நகர், காந்தி நகர், சி.எம்.எஸ். நகர், நந்தனார் காலனி, நாட்டுக்கல், பாரதியார் நகர், காள வாசல், உள்ளிட்ட பல விரிவாக்கப் பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டு, வளர்க்க துவங்கி உள்ளனர். இங்குள்ள நாலந்தா இன்னோவேசன் பள்ளியின் முதல் வகுப்பு மாணவர்கள் முதல் 10 ம் வகுப்பு மாணவர்கள் வரை மரக்கன்றுகள் வளர்ப்பது எப்படி என்று விளக்கி தினமும் ஒரு மணி நேரம் களப்பயிற்சி தரப்படுகிறது. அதன் படி இந்த பள்ளி ஆசிரியைகள் மாணவ மாணவிகளை அழைத்து கொண்டு பள்ளி வளாகம், அருகில் உள்ள காலி இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்வதற்கு எப்படி குழி தோண்ட வேண்டும், மரக்கன்றுகளை எவ்வாறு நடவு செய்வது, ஒவ்வொரு மரக்கன்றுக்கும் தண்ணீர் பாய்ச்சும் முறை, தொடர்ந்து மரக்கன்றுகள் வளரும் வரை பராமரிப்பது எப்படி, ஒவ்வொரு மரமும் தரும் பலன்கள் என மாணவ மாணவிகளுக்கு அடிப்படை விபரங்களை விளக்கிக் கூறி வருகின்றனர். மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு களப்பணிகள் கம்பம் பகுதியில் தொடர்வதால் பிற பள்ளிகளுக்கு முன்னுதாரணமாக பள்ளி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.
பன்னீர் மரக்கன்றுகள்
வி.கே.ஜி. விஸ்வ நாதன், தாளாளர், நாலந்தா இன்னோவேசன் பள்ளி, கம்பம் : சுற்றுப்புறச் சூழல் பாதிப்பில் இருந்து மீள மரங்கன்றுகள் வளர்க்க பிரசாரம் செய்யப்படுகிறது.
எங்கள் பள்ளியில் முதல் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் முதல் அனைவருக்கும், மரக்கன்றுகளை எவ்வாறு நடவு செய்ய வேண்டும், அதற்கான முதற்கட்ட பணிகள், தொடர்ந்து பராமரிப்பது எப்படி, அதன் பலன்கள் பற்றி தினமும் ஒரு மணி நேரம் ஆசிரியைகள் களப்பயிற்சி கொடுக்கின்றனர். மாணவர்கள் மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும். மரம் வளர்ப்பு, சுற்றுப்புறச் சூழல் பற்றி சிறப்பு வகுப்புகள் எங்கள் பள்ளியில் நடத்தப்படுகின்றன. இன்றைய காலகட்டத்திற்கு அது தான் முக்கிய தேவையாக உள்ளது. மரங்கன்றுகள் வளர்ப்பிலும் ஒரு வரைமுறை வேண்டும். ஏனோ தானோ என்று மரக்கன்றுகளை நட்டோம். எந்த மண்ணிற்கு எந்த மரம் உகந்தது என்பதை தெரிந்து நடவு செய்ய பயிற்றுவிக்கின்றோம்.. வேம்பு, மந்தாரை, புங்கன், பன்னீர், தேக்கு, பூவரசு என தேவையான மரங்களை நடுவதற்கு பயிற்சிகள் தரப்படுகிறது. வேணடும். எங்கள் பள்ளி சார்பில் கம்பம் நகருக்குள் மரங்கன்றுகள் நட நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். வார விடுமுறை நாட்களில் அந்த பணி நடைபெறும். கம்பத்தை கிரீன் கவருக்குள் கொண்டு வருவது எங்கள் திட்டமாகும். பல்வகை மரங்கன்றுகள் மட்டும் இல்லாமல் மலர் செடிகள், மூலிகை செடிகளும் வளர்க்க உள்ளோம். பன்னீர் பூக்களின் வாசமும், சுவாசிக்க சுத்தமான காற்றும் கிடைத்தால் ஒருவித ஆரோக்கியமான சிந்தனைகள் உருவாகும். எனவே பன்னீர் மரங்கன்றுகள் வளர்க்க உள்ளோம்., என்றார்.
சிறப்பு வகுப்புகள்
சையது அப்தாகிர், தலைமை ஆசிரியர், சி.பி.யூ. மேல்நிலைப் பள்ளி , கம்பம் :
எங்கள் பள்ளியில் சுற்றுப்புறச் கழல் மாசுபடுவதை பற்றி ஆசிரியர்கள் விரிவாக கூறி, அதை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று வாரம் ஒரு முறை சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகின்றனர்.
மூலிகை பண்ணை, பல்வகை மரக்கன்றுகள் கிடைக்கும் நர்சரி துவங்க திட்டமிட்டு உள்ளோம். நகராட்சியை குறை கூறுவதை விட்டுவிட்டு ஒவ்வொரு பள்ளி நிர்வாகமும், நகரம் மாசில்லாமல் இருக்க தங்களால் முடிந்த அளவு முயற்சிக்க வேண்டும்.
பள்ளிகளை ஒருங்கிணைத்து மரக்கன்றுகளை நடுவதை ஒரு இயக்கமாக மாற்ற திட்டமிட்டு உள்ளோம். எங்கள் பள்ளி வளாகத்தில் நிறைய மரங்கள் உள்ளன. நடவு செய்து மரக் கூட்டம் ஒன்றை உருவாக்க உள்ளோம். மரங்கன்றுகள் பல்வேறு இடங்களில் நடவு செய்து வளர்ப்பதன் மூலம் கம்பம் நகரத்தை ஒரு பசுமை நகரமாக மாற்ற முடியும்., என்றார்.

