/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முருகன் கோயில்களில் இன்று கந்த சஷ்டி விரதம் துவக்கம்
/
முருகன் கோயில்களில் இன்று கந்த சஷ்டி விரதம் துவக்கம்
முருகன் கோயில்களில் இன்று கந்த சஷ்டி விரதம் துவக்கம்
முருகன் கோயில்களில் இன்று கந்த சஷ்டி விரதம் துவக்கம்
ADDED : நவ 02, 2024 08:17 AM
தேனி: மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விரதம் துவங்குகிறது.
ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், போடி சுப்பிரமணியசுவாமி கோயில், உத்தமபாளையம் சுருளி வேலப்பர் கோயில், தேனி பெத்தாட்சி விநாயகர் கோயில், என்.ஆர்.டி., ரோடு சிவ கணேச கந்தபெருமாள் கோயில், பெரியகுளம் ரோடு வேல்முருகன் கோயில், பங்களாமேடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், வீரப்ப அய்யனார் மலைக்கோயில் உள்ள சுப்பிரமணியர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நாளை காலை 5:30 மணிக்கு கந்த சஷ்டி விழா துவங்குகிறது.
இக்கோயில்களில் நடக்கும் கந்த சஷ்டி விழா இன்று காப்பு கட்டுதலுடன் துவங்கி உள்ளது. தினமும் காலை, மாலையில் சஷ்டி பாராயாணம், அபிஷேக, ஆராதனைகள் நடக்க உள்ளன. சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவ., 7லும், நவ.,8 ல் முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடக்க உள்ளன. இதற்கான விரிவான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள், தனியார் கோயில் நிர்வாகங்கள், செயல் அலுவலர்கள் செய்துள்ளனர்.