ADDED : ஆக 08, 2025 03:17 AM
பெரியகுளம்: பெரியகுளம் அருகே வடுகபட்டியில் வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. கருணாநிதி படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது.
மாநில உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் மூக்கையா தலைமை வகித்தார். சரவணக்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத் தலைவர் செல்லப்பாண்டியன் முன்னிலை வகித்தனர். வடக்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன், பேரூராட்சி தலைவர் நடேசன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
பெரியகுளம் நகர தி.மு.க., சார்பில் பழைய பஸ் ஸ்டாண்ட் முன்னாள் முதல்வர் அண்ணாத்துரை சிலை முன் கருணாநிதி படத்திற்கு நகர செயலாளர் முகமது இலியாஸ், நிர்வாகிகள் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.-- ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றியச் செயலாளர் ராஜாராம் தலைமையில் தி.மு.க.,வினர் ஆண்டிபட்டி மெயின் ரோடு வழியாக மவுன ஊர்வலம் சென்றனர்.
தி.மு.க., நகர செயலாளர் சரவணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செல்வம், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சேது ராஜா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பாண்டியன் உட்பட ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.