/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ராஜமலை ரோட்டில் வனத்துறை மினி பஸ்களை வழிமறித்த கட்ட கொம்பன் சுற்றுலா பயணிகள் பாதிப்பு
/
ராஜமலை ரோட்டில் வனத்துறை மினி பஸ்களை வழிமறித்த கட்ட கொம்பன் சுற்றுலா பயணிகள் பாதிப்பு
ராஜமலை ரோட்டில் வனத்துறை மினி பஸ்களை வழிமறித்த கட்ட கொம்பன் சுற்றுலா பயணிகள் பாதிப்பு
ராஜமலை ரோட்டில் வனத்துறை மினி பஸ்களை வழிமறித்த கட்ட கொம்பன் சுற்றுலா பயணிகள் பாதிப்பு
ADDED : ஜன 31, 2024 06:42 AM

மூணாறு : மூணாறு அருகே ராஜமலை செல்லும் ரோட்டில் கட்ட கொம்பன் காட்டு யானை வனத்துறையின் சுற்றுலா மினி பஸ்களை வழி மறித்ததால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
மூணாறு அருகே பெரியவாரை எஸ்டேட் பகுதியில் இரண்டு குட்டிகள் உள்பட ஆறு காட்டு யானைகளைக் கொண்ட கூட்டம் கடந்த 2 நாட்களாக முகாமிட்டன. அவை நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் பெரியவாரை குருசடி அருகே ரோட்டில் வாகனங்களை வழி மறித்தன. அவற்றை வனத்துறையினர் விரட்டிய நிலையில் இரவு 10:45 மணிக்கு கன்னிமலை எஸ்டேட் பாக்டரி டிவிடினில் தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் சென்றன. அங்கு நள்ளிரவு 2:00 மணி வரை பாலகிருஷ்ணன், ராஜபாண்டி, ராஜேந்திரன் ஆகியோர் தோட்டங்களில் சாகுபடி செய்த பீன்ஸ், பட்டாணி, காரட் ஆகியவற்றை தின்று சேதப்படுத்தின.
அவை நேற்று காலை இரவிகுளம் தேசிய பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலைக்குச் செல்லும் ரோடு அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்ட நிலையில் அவற்றுடன் கட்ட கொம்பன் இணைந்தது.
பின்னர் பகல் 1:30 மணிக்கு ரோட்டிற்கு வந்த கட்ட பொம்பன் ராஜமலைக்கு வரையாடுகளை பார்க்க சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற வனத்துறையினருக்குச் சொந்தமான மினி பஸ்களை வழிமறித்தது.
பகல் 3:30 மணி வரை ரோட்டில் கட்ட கொம்பன் நடமாடியதால் வாகனங்கள் கடந்து செல்ல இயலாத நிலை ஏற்பட்டு பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்த யானை தென்மலை எஸ்டேட் லோயர் டிவிஷனில் திருமண நிகழச்சியில் பங்கேற்க வந்த கோவை தொப்பனூர் எம்.ஆர். புரத்தைச் சேர்ந்த பால்ராஜை 79, ஜன.,23 இரவில் கொன்றது குறிப்பிடத்தக்கது.