/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் தேரோட்டம் நிறைவு
/
கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் தேரோட்டம் நிறைவு
ADDED : மே 13, 2025 06:52 AM
ஆண்டிபட்டி : ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் முடிந்த பின் சுவாமி கோயில் சென்றடையும் நிகழ்ச்சி நடந்தது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் 800 ஆண்டுகள் பழமையானது. கோயில் சித்திரைத் திருவிழா மே 2ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
12 நாட்கள் விழாவில் தினமும் கதலி நரசிங்கப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் 7ம் நாளில் சுவாமி திருக்கல்யாணம், 9ம் நாளில் சுவாமி திருத்தேர் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது. 10,11ம் நாட்களில் தேரோட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.
நேற்று திருத்தேர் நிலைக்கு கொண்டுவரப்பட்ட பின், சுவாமி திருத்தேர் தடம் பார்ப்பு நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு பூஜைகள் முடிந்த பின் சுவாமி கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார். பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.