இடுக்கியில் நிலவும் பிரச்னைகளுக்கு முன்னுரிமை: கேரள முதல்வர் உறுதி
இடுக்கியில் நிலவும் பிரச்னைகளுக்கு முன்னுரிமை: கேரள முதல்வர் உறுதி
ADDED : செப் 29, 2026 04:24 AM
மூணாறு: 'இடுக்கி மாவட்டத்தில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காண அரசு முன்னுரிமை அளித்து வருகிறது,' என கேரள முதல்வர் சதீசன் தெரிவித்தார்.
இம் மாவட்டத்தில் நிலவும் நிலம் தொடர்பான பிரச்னைகள் உட்பட அனைத்து பிரச்னைகள் குறித்து இடுக்கி கலெக்டர் அலுவலகத்தில் முதல்வர் உயர் அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தினர்.
அப்போது முதல்வர் கூறியதாவது:
இடுக்கி மாவட்டத்தில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காண அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
நிலப்பட்டா வழங்குவது உள்ளிட்ட செயல்பாடுகள் விரைவுபடுத்தப்படும்.
எவ்வித தடையும் இன்றி உள்ள 5 ஆயிரம் நிலப் பட்டாக்கள் உடனடியாக வழங்கப்படும்.
நிலப்பட்டா தொடர்பாக தடையாக இருக்கும் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் தீர்ப்புகளில் சாதகமான முடிவுகள் எடுக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில், அப்பிரச்னையில் நான் நேரடியாகத் தலையிடுவேன்.
மனித, வனவிலங்குகள் மோதலை தவிர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாவட்டத்தில் 60 சதவீதம் பிரச்னைகள் மீது முடிவுகள் எடுக்கப் பட்டுள்ளன.
எளிதில் தீர்க்கக்கூடிய பிரச்னைகள் மட்டுமே எஞ்சியுள்ளன. அவற்றை உரிய நேரத்தில் தீர்க்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
நில ஆக்கிரமிப்பாளர், புலம்பெயர்ந்தோர் ஆகியோர் இரு வேறுபட்ட தரப்பினராக கருதப்படுகின்றனர். எந்த சூழலிலும் ஆக்கிரமிப்பை அனுமதிக்க இயலாது. புலம்பெயர்ந்த விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க அரசு துணை நிற்கும், என்றார்.
