/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சந்தன மரங்கள் வளர்க்கும் திட்டம் பொதுமக்களுக்கு அழைப்பு கேரள வனத்துறையின் புதிய திட்டம்

ADDED : ஜூன் 18, 2025 04:38 AM
கம்பம்: பொதுமக்களுடன் இணைந்து சந்தன மரங்கள் வளர்க்கும் திட்டத்தை கேரள வனத்துறை அறிவித்துள்ளது.
சந்தன மரங்கள் கேரளளவில் மறையூர் பகுதியில் அதிக எண்ணிக்கையில் உள்ளன. அழகு சாதன பொருள்கள், கைவினை பொருள்கள், மருத்துவ பயன்பாடு, சென்ட் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் சந்தனம் பயன்படுகிறது. குறிப்பாக கோயில்களிலும் இறை வழிபாட்டில் முக்கிய பங்காற்றுகிறது. தானாக விழுந்த சந்தன மரங்களை கேரள வனத்துறை ஏலம் விட்டு நல்ல வருவாய் ஈட்டுகிறது. எனவே அதிக எண்ணிக்கையில் சந்தன மர வளர்ப்பை ஊக்குவிக்க கேரள வனத்துறை திட்டமிட்டுள்ளது. இதில் பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது.
கேரள வனத் துறையுடன் நிலம் வைத்திருக்கும் பொதுமக்கள் 15 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்.
100 மரங்கள் வரை வளர்க்க ஒரு மரத்திற்கு ரூ.30 ம், 100 முதல் 250 மரங்கள் வரை ரூ.25ம், 500 மரங்கள் வரை ரூ.20ம், 750 மரங்கள் வரை ரூ, 15ம், ஆயிரம் மரங்கள் வரை ரூ.10 என மரங்களை பராமரிக்க ஊக்கத் தொகையாக மாதந்தோறும் வழங்கப்படுகிறது. 15 ஆண்டுகள் வளர்ந்த பின் சம்பந்தப்பட்ட சமூக வனத்துறை ரேஞ்சரின் ஒப்புதல் பெற்று, மரங்களை வளர்ப்பவர்கள் வெட்டி விற்பனை செய்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 30 ஆயிரம் சந்தன மரக் கன்றுகள் வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக கோட்டயம், கொல்லம், திருவனந்தபுரம் மாவட்டங்களிலும் தொடர்ந்து கேரள முழுவதும் இந்த திட்டம் விரிவுபடுத்த கேரள வனத் துறை திட்டமிட்டுள்ளது.