/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வனங்களில் ஏற்படும் மரணங்களுக்கு வனத்துறையை பழி சுமத்துவது தொடர்கிறது
/
வனங்களில் ஏற்படும் மரணங்களுக்கு வனத்துறையை பழி சுமத்துவது தொடர்கிறது
வனங்களில் ஏற்படும் மரணங்களுக்கு வனத்துறையை பழி சுமத்துவது தொடர்கிறது
வனங்களில் ஏற்படும் மரணங்களுக்கு வனத்துறையை பழி சுமத்துவது தொடர்கிறது
ADDED : ஜூன் 16, 2025 12:28 AM
மூணாறு: வனங்களில் நடக்கும் மரணங்கள் அனைத்தும் வனத்துறை மீது பழி சுமத்தப்படுவதாக கேரள வனத்துறை அமைச்சர் சசீந்திரன் குற்றம் சாட்டினார்.
இடுக்கி மாவட்டம் பீர்மேடு அருகே மலைவாழ் மக்கள் வசிக்கும் தோட்டப்புரா பகுதியைச் சேர்ந்த பினு, தனது மனைவி சீதாவுடன் 50, ஜூன் 13ல் வன விளைப் பொருட்கள் சேகரிக்க வனத்தின் உள்ளே சென்றார்.
அப்போது மனைவியை காட்டு யானை தாக்கி கொன்றதாக கூறி நாடகமாடினார். பிரேத பரிசோதனையில் காட்டு யானை தாக்கி இறக்கவில்லை என தெரியவந்தது.
இதனிடையே பிரேத பரிசோதனை நடக்கும் முன்னரே காட்டு யானை தாக்கி சீதா இறந்ததாக கூறி உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என, உறவினர்கள் உள்பட உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதனால் வனத்துறை அமைச்சர் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். அதனை வழங்க வனத்துறையினர் தயாராகினர். இது குறித்து கேரள வனத்துறை அமைச்சர் சசீந்திரன் கூறியதாவது:
பீர்மேடு அருகே வனத்தினுள் பெண் இறந்த சம்பவத்தில் காரணம் தெரியும் முன்னர் வனத்துறையை குற்றவாளியாக்க முயன்றனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை தான் முக்கிய ஆவணம். வனங்களில் நடக்கும் மரணங்கள் அனைத்திற்கும், வனத்துறை மீதே பழி சுமத்தப்படுவது தொடர்கிறது. அந்த பெண் இறந்த சம்பவத்தில் சிறிது தாமதித்து இருந்தால், கொலைக்கு இழப்பீடு வழங்க நேர்ந்திருக்கும்.
வனத்தினுள் ஏற்படும் மரணங்கள், மக்கள் நடமாடும் பகுதிகளில் வனவிலங்கு தாக்குதல் ஆகியவற்றை தனித்தனியாக பார்க்க வேண்டும் என, தெரிவித்தார்.