ADDED : நவ 18, 2024 04:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சபரிமலை: பம்பையில் இருந்து நிலக்கல் சென்று கொண்டிருந்த கேரள அரசு பஸ் அட்டத்தோடு அருகே தீப்பிடித்து எரிந்தது. உயிர் சேதம் இல்லை.
பம்பையில் இருந்து நேற்று அதிகாலை நிலக்கல்லுக்கு சென்று கொண்டிருந்த கேரள அரசு தாழ்தள பஸ் அட்டத்தோடுஅருகே சென்று கொண்டிருந்தபோது இன்ஜினில் இருந்து புகை வரத் தொடங்கியது. பஸ்சில் பயணிகள் இல்லை. டிரைவர் பஸ்சை நிறுத்திவிட்டு தீயணைப்பான் மூலம் தீயை அணைக்க முயற்சித்தும் பலனளிக்கவில்லை.
டிரைவர், கண்டக்டர் பஸ்சிலிருந்து ஓடினர். பம்பையிலிருந்து தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்த போது பஸ் முழுவதும் எரிந்து சேதமானது. விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.