/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
5 ஆண்டுக்குப்பின் செயல்பட துவங்கிய கே.எம்.பட்டி அவுட் போலீஸ் ஸ்டேஷன்
/
5 ஆண்டுக்குப்பின் செயல்பட துவங்கிய கே.எம்.பட்டி அவுட் போலீஸ் ஸ்டேஷன்
5 ஆண்டுக்குப்பின் செயல்பட துவங்கிய கே.எம்.பட்டி அவுட் போலீஸ் ஸ்டேஷன்
5 ஆண்டுக்குப்பின் செயல்பட துவங்கிய கே.எம்.பட்டி அவுட் போலீஸ் ஸ்டேஷன்
ADDED : செப் 20, 2024 06:30 AM
கூடலுார் : கருநாக்கமுத்தன்பட்டியில் அவுட் போலீஸ் ஸ்டேஷன் 5 ஆண்டுக்குப் பின் நேற்று முழுமையாக செயல்பட துவங்கியது.
கூடலுார் அருகே கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, ஆங்கூர்பாளையம், சுருளியாறு மின்நிலையம் உள்ளிட்ட பகுதிகளை இணைத்து கருநாக்கமுத்தன்பட்டியில் அவுட் போலீஸ் ஸ்டேஷன் 2019ல் துவக்கப்பட்டது. ஆனால் போலீஸ் எண்ணிக்கை குறைவு காரணத்தால் துவங்கிய நாளிலிருந்து செயல்பட முடியவில்லை. அவ்வப்போது பிரச்னை ஏற்பட்ட நாளில் மட்டும் பெயரளவில் திறந்து வைக்கப்பட்டது.
மற்ற நாட்கள் முழுவதும் பூட்டிய நிலையிலேயே இருந்தது.
இதனால் கிராமங்களில் உள்ள மக்கள் போலீஸ் புகார் தொடர்பாக கூடலுாருக்கு வர வேண்டிய சூழல் ஏற்பட்டது. கிராமங்களுக்கிடையே நேரடி பஸ் வசதி இல்லாததால் பல கிலோ மீட்டர் சுற்றிவர வேண்டிய நிலை ஏற்பட்டது. கருநாக்கமுத்தன்பட்டியில் நிரந்தரபோலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று சிறப்பு எஸ்.ஐ., தலைமையில் போலீசார் நியமிக்கப்பட்டு செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன் துவக்க விழாவில் கூடலுார் இன்ஸ்பெக்டர் வனிதாமணி, போலீசார்கள், தனிப்பிரிவு போலீசார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.