ADDED : ஜன 04, 2025 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கேரளா குமுளி அருகே செங்கரையை சேர்ந்தவர் சுனில் 52. இவருக்கும் கம்பத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் 33,க்கும் முன் விரோதம் இருந்துள்ளது.
நேற்று குமுளி பஸ் ஸ்டாண்ட் அருகே இருவருக்கும் வாக்குவாதம்  முற்றியதில் சுனிலை கத்தியால் குத்தி விட்டு தப்பியோட முயன்ற மகேஸ்வரனை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
குமுளி பஸ் ஸ்டாண்ட் அருகே பகலில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

