/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கொச்சி --- தனுஷ்கோடி நெடுஞ்சாலை விரிவாக்கம்: 16 கட்டடங்களுக்கு நோட்டீஸ்

ADDED : ஆக 31, 2025 04:15 AM
மூணாறு: கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி தொடர்பாக பழைய மூணாறில் 16 கட்டடங்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அளித்தனர்.
கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு, கொச்சி இடையே 126 கி.மீ., தூரம் ரூ.1250 கோடி செலவில் ரோடு விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. அதற்கு பழைய மூணாறு பகுதியில் நிலம் கையகப்படுத்துவதற்கு வசதியாக சர்வே பணிகள் அனைத்தும் பூர்த்தியாகின. அதில் ரோடு கடந்து செல்லுவதற்கு இடையூறாக பல கட்டடங்கள் உள்ளது. அதுபோன்று இடையூறாக உள்ள 16 கட்டங்களுக்கு நோட்டீஸ் அளித்த நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் ரோடு கடந்து செல்லும் பகுதியினை கட்டங்களில் அடையாளப்படுத்தினர். அவற்றை 15 நாட்களுக்குள் தாமாக அகற்ற வேண்டும்.அகற்றாவிடில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
மூணாறு நகரில் ஆற்றோரம் உள்ள 44 கடைகளின் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு வருவாய்துறையினர் நோட்டீஸ் அளித்த நிலையில் பழைய மூணாறில் ரோடு விரிவாக்கத்திற்கு 16 கட்டடங்களுக்கு நோட்டீஸ் அளித்த சம்பவம் கலக்கத்தை ஏற்படுத்தியது.