/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கொடுக்காப்புளி கிலோ ரூ.400க்கு விற்பனை
/
கொடுக்காப்புளி கிலோ ரூ.400க்கு விற்பனை
ADDED : ஆக 11, 2025 04:12 AM
போடி: மருத்துவ குணம் வாய்ந்த கொடுக்காப் புளி அரிதாகி வரும் நிலையில் தற்போது கிலோ ரூ.400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கொடுக்காப்புளி மழை, காற்று அதிகம் அடித்தாலும் மரத்தில் இருந்து கீழே விழாமல் காய்த்து தொங்கி கொண்டு இருக்கும்.
மார்ச், ஏப்., மே, ஜூனில் கொடுக்காப்புளி சீசனாகும். இதில் கால்சியம், வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. தற்போது போடியில் கொடுக்காப்புளி கிலோ ரூ.400க்கு விற்பனை செய்கின்றனர்.
வியாபாரி ஜமால்தீன் கூறியதாவது: கொடுக்காப்புளி ஆண்டுக்கு ஒரு முறை சீசனாகும்.
தற்போது கால மாற்றத்தால் சீசன் மாறியும் காய்த்து வருகிறது. வியாபாரிகள் பழனியில் உள்ள விவசாய பண்ணையில் கிலோ ரூ.300 க்கு வாங்குகின்றோம்.
தரம் பிரித்து,, செலவினம் சேர்த்து சில்லறையில் ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனை செய்கின்றோம். சத்து அதிகம் உள்ளதால் மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர் என்றார்.