/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
10 நாட்கள் முடங்கிய ரோடு பணி: இன்று துவங்குவதாக செயல் அலுவலர் உறுதி
/
10 நாட்கள் முடங்கிய ரோடு பணி: இன்று துவங்குவதாக செயல் அலுவலர் உறுதி
10 நாட்கள் முடங்கிய ரோடு பணி: இன்று துவங்குவதாக செயல் அலுவலர் உறுதி
10 நாட்கள் முடங்கிய ரோடு பணி: இன்று துவங்குவதாக செயல் அலுவலர் உறுதி
ADDED : ஆக 11, 2025 04:12 AM

தேனி: முத்துத்தேவன்பட்டி அன்புச்சோலை நகர் குடியிருப்புப் பகுதியில் சீரமைப்புப் பணி என ரோட்டை தோண்டி 10 நாட்களுக்கு மேல் ஆகிறது. பொது மக்கள் தினசரி கற்கள் இடரி விழுந்து காயமடைகின்றனர். இதனால் சீரமைப்புப் பணிகளை உடனடியாக துவங்க பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீரபாண்டி பேரூராட்சி 5வது வார்டில் முத்துத்தேவன்பட்டி அன்புச்சோலை நகர் உள்ளது. இந்நகரில் சுமார் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 90க்கும் மேற்பட்ட பொது மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் மண்ரோடு இருந்தது. அதனை சாக்கடை கால்வாய் அமைத்து சீரமைத்து தர வேண்டும் என பொது மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் இக்குடியிருப்புப் பகுதியில் ரோடு அமைய உள்ளதாக பேரூராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜூலை 28ல் மண் ரோட்டினை பேரூராட்சி சார்பில் தோண்டினர். அதன் பின் ரோடு அமைக்கும் பணியை கிடப்பில் போட்டனர். இதனால் ரோடு பல இடங்களில் குண்டும் குழியுமாக மாறியது. நடந்தும், டூவீலர்களிலும் செல்ல முடியாமல் பலர் தடுமாறி விழுந்து காயமடைவது தொடர்ந்தது. வீரபாண்டி பேரூராட்சியில் தெரிவித்தாலும் பொது மக்களுக்கு சரிவர பதில் தெரிவிப்பது இல்லை என, அப்பகுதியில் குடியிருப்போர் புலம்பி வருகின்றனர். பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் கூறியதாவது: ஒப்பந்ததாரர் பணி ஆட்கள் கிடைக்காததால் பணியை நிறுத்தி உள்ளனர். பணியை துவக்க அறிவுறுத்தி உள்ளோம். இன்று மீண்டும் பணிகளை துவக்கி விடுவர்., என்றார்.

