/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கோட்டைக்களத்தெரு குப்பையாக காட்சியளிக்கும் அவலம் தெருநாய்கள் தொல்லையால் குடியிருப்போர் அச்சம்
/
கோட்டைக்களத்தெரு குப்பையாக காட்சியளிக்கும் அவலம் தெருநாய்கள் தொல்லையால் குடியிருப்போர் அச்சம்
கோட்டைக்களத்தெரு குப்பையாக காட்சியளிக்கும் அவலம் தெருநாய்கள் தொல்லையால் குடியிருப்போர் அச்சம்
கோட்டைக்களத்தெரு குப்பையாக காட்சியளிக்கும் அவலம் தெருநாய்கள் தொல்லையால் குடியிருப்போர் அச்சம்
ADDED : நவ 27, 2024 08:07 AM

தேனி : தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட கோட்டைக் களத்தெருவில் திரும்பும் திசையெங்கும் குப்பையாக காட்சியளிகின்றன.இதனால் சுகாதார சீர் கேட்டில் தவிப்பதாக அப்பகுதியில் வசிப்போர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
தேனி நகராட்சி 15வது வார்டில் மிரண்டாலைன் 1,2, நேருஜிரோடு, வீரகாளியம்மன் கோவில்தெரு, ஸ்ரீராம் நகர், கோட்டைக்களத்தெரு உள்ளிட்ட பகுதிகள் அமைந்துள்ளன. இதில் கோட்டைக்களத்தெரு பகுதியில் தாலுகா அலுவலகம், மாவட்ட நுாலகம், உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகள் அமைந்துள்ளன. இதே பகுதியில் மீறு சமுத்திர கண்மாய் அமைந்துள்ளது.
100க்கும் மேற்பட்ட வீடுகளில் 450க்கும் அதிகமான பொதுமக்கள் வசிக்கின்றனர்.இந்த பகுதியில் எங்கு பார்த்தாலும் குப்பை மேடாகவும், தெருநாய்கள் தொல்லை அதிகரித்தும் காணப்படுகிறது.
அதே போல் இரவில் போலீசார் ரோந்து வராத தால் தேவையின்றி சுற்றும் சமூக விரோதிகளின் ன் நடமாட்டமும் அதிகம் உள்ளது. நகராட்சி சார்பில் துப்புரவு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. நகராட்சி அலுவலகத்தில் முறையிட்டாலும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லைஎன்கின்றனர்.
வீடுகளில் குப்பை சேகரிக்க வேண்டும்
தமிழ்செல்வி, சமுகஆர்வலர், கோட்டைக்களத்தெரு, தேனி :பொதுமக்கள் குப்பையை நகராட்சி நிர்வாகத்திடம் வழங்க தயாராக உள்ளனர். ஆனால் நகராட்சியில் இருந்து வீடுகளில் குப்பை சேகரிப்பதில்லை. இதனால் பல இடங்களில் குப்பை கொட்டி தெருவில் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
பல பகுதிகளில் இருந்து டூவீலர்களில் குப்பை கொண்டு வருபவர்கள் தெருக்களில் ஆங்காங்கே வீசி செல்வது வாடிக்கையாக உள்ளது.
மீறுசமுத்திர கண்மாய் அருகே கோட்டைக்களத்தெருவில் பலரும் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். இப் பகுதியில் சுகாதார சீர்கேட்டால் நடைபயிற்சி மேற்கொள்வதை தவிர்க்கின்றனர். நகராட்சி சுகாதார பிரிவினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாக்கடை சீரமைக்க வேண்டும்
மருதாயம்மாள், கோட்டைக்களத்தெரு, தேனி .கோட்டைக்களத்தெருவில் உள்ள சாக்கடை சில மாதங்களுக்கு முன் சீரமைக்கப்பட்டது. சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு மீண்டும் ரோட்டில் செல்கிறது. அதில் வால்புழுக்கள் அதிகம் வளர்ந்துள்ளது.
இதே போல் பல இடங்களில் சாக்கடை அடைத்து கழிவு நீர் செல்ல வழியின்றி உள்ளது.
சாக்கடைகளை துார்வார வேண்டும். குளத்தின் அருகில் உள்ள ரோட்டில் போதிய அளவு தெருவிளக்கு வசதி ஏற்படுத்திட வேண்டும். என்றார்