/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆன்லைன் வர்த்தகம் மூலம் ரூ.8.31 லட்சம் மோசடி கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் கைது

ADDED : மே 17, 2025 03:42 AM

மூணாறு: மூணாறில் 'ஆன்லைன்' வர்த்தகம் தொடர்பாக பெண்ணிடம் ரூ.8.31 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
கேரளா, கோழிக்கோடு மாவட்டம் செரு வாடி பகுதியைச் சேர்ந்தவர் ஷெபீன் அப்துல்சலீம் 28. இவருக்கு ' ஆன் லைன் சார்ட்டிங்' மூலம் மூணாறு அருகே பள்ளிவாசல் எஸ்டேட்டைச் சேர்ந்த பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. அதன் மூலம் ஆன் லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார். அதனை நம்பி சம்பந்தப்பட்ட பெண் கடந்தாண்டு பல கட்டங்களாக ரூ.8.31 லட்சம் கொடுத்தார். வர்த்தகத்திற்கு ஷெபீன் அப்துல்சலீம் விதித்த நிபந்தனைகளை பூர்த்தி செய்த பிறகும் லாப விகிதம் மற்றும் கொடுத்த பணம் எதுவும் திரும்ப கிடைக்கவில்லை. அதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் மூணாறு போலீசில் புகார் அளித்தார். அதன்படி எஸ்.ஐ. பினுஆன்ட்ரூஸ் தலைமையில் போலீசார் ஷெபீன் அப்துல்சலீமை கைது செய்தனர்.