/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்; குழந்தைகள் கிருஷ்ணன், ராதை வேடமிட்டு அசத்தல்
/
கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்; குழந்தைகள் கிருஷ்ணன், ராதை வேடமிட்டு அசத்தல்
கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்; குழந்தைகள் கிருஷ்ணன், ராதை வேடமிட்டு அசத்தல்
கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்; குழந்தைகள் கிருஷ்ணன், ராதை வேடமிட்டு அசத்தல்
ADDED : ஆக 17, 2025 12:15 AM

ஆண்டிபட்டி; கொண்டமாநாயக்கன்பட்டியில் நாயுடு உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ ராதை சமேத நவநீதகிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. விழாவை முன்னிட்டு கோயிலில் கண்ணன் பிறப்பு குறித்த பஜனை பாடல்கள் பாடினர். பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. ஸ்ரீ கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்த 210 குழந்தைகளுக்கு கோயில் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. பெண்கள் முளைப்பாரி மற்றும் கோலாட்டம், பஜனை பாடலுடன் நவநீதகிருஷ்ணன் சுவாமியை கொண்டமநாயக்கன்பட்டி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் எடுத்துச் சென்றனர். விழா ஏற்பாடுகளை நாயுடு சங்க தலைவர் பால்பாண்டி, சமூக தலைவர் கண்ணபிரான், செயலாளார் காமாட்சி, பொருளாளர் காந்தையன் ஆகியோர் செய்திருந்தனர்.
பெரியகுளம்: தென்கரை நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர், ராதை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணசைதன்யதாஸ், காசியம்மாள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
தென்கரை கோபாலகிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு பாலகர் கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
தேனி: என்.ஆர்.டி., நகர் சிவகணேச கந்தபெருமாள் கோவில், அல்லிநகரம் பெருமாள் கோவில், பெரியகுளம் ரோடு எம்பெருமாள், ருக்மணியம்மாள் கோவில், பூதிப்புரம் பெருமாள் கோவில், பழனிசெட்டிபட்டி கோபாலகிருஷ்ணன் கோவில்களில் கிருஷ்ணஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மாலையில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. அதில் சிறார்கள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு பங்கேற்றனர். கோவில் நிர்வாகங்கள் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அல்லிநகரம் பாக்யா மெட்ரிக் பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி செயலாளர் பாக்யாகுமாரி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் பரந்தாமன் முன்னிலைவகித்தார். குழந்தைகள் கிருஷ்ணர், ராதைவேடமட்டு போட்டியில் பங்கேற்றனர்.