/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கிருஷ்ண ஜெயந்தி விழா: கருடாழ்வார் அழைப்பு இன்று உறியடி திருவிழா நடக்கிறது
/
கிருஷ்ண ஜெயந்தி விழா: கருடாழ்வார் அழைப்பு இன்று உறியடி திருவிழா நடக்கிறது
கிருஷ்ண ஜெயந்தி விழா: கருடாழ்வார் அழைப்பு இன்று உறியடி திருவிழா நடக்கிறது
கிருஷ்ண ஜெயந்தி விழா: கருடாழ்வார் அழைப்பு இன்று உறியடி திருவிழா நடக்கிறது
ADDED : செப் 16, 2025 04:56 AM

கம்பம்: கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கம்பத்தில் கருடாழ்வாரை மேள தாளத்துடன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இன்று உறியடி திருவிழா நடக்கிறது.
கம்பம் யாதவர் மடாலய வளாகத்தில் உள்ள யதுகுலவல்லி சமேத வேணுகோபால கிருஷ்ணன் கோயிலில் ஆவணி ரோகினி நட்சத்திரத்தில் கிருஷ்ணர் பிறந்தநாளை, கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடி வருகின்றனர்.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நூற்றுக்கணக்கில் பெண்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.
பாலாபிஷேகம் முடிந்த பின், பெண்கள் பொங்கல் பானைகளுடன் ஊர்வலமாக சென்று கம்ப ராயப் பெருமாள் கோயிலில் பொங்கல் வைத்து காசி விஸ்வநாதரையும், சிவபெருமானையும் வழி பட்டனர்.
தொடர்ந்து உற்ஸவர் கம்பராய பெருமாளையும், அவரது வாகனமான கருடாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள் செய்து ஊர்வலமாக வேணுகோபால கிருஷ்ணன் கோயிலிற்கு சென்றனர். ஜெயந்தி விழாவை முன்னிட்டு குழந்தைகள் கிருஷ்ணர், ராதை, நரசிம்மர் உள்ளிட்ட கிருஷ்ண அவதார வேடங்களை அணிந்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று (செப்.,16) கம்பராயப்பெருமாள் திருமஞ்சனம், கம்பராயப் பெருமாள் திருவாரதனம், மங்கள ஆரத்தி, இரவு 8:00 மணியளவில் கம்பராயப் பெருமாள் கருடவாகனம் ஊர்வலமாக புறப்பட்டு வேலப்பர் கோயில் முன்பு வழுக்கு மரம் ஏறுதல், உறியடி நிறைவு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.
இதன் பின் சுவாமி கம்பராயப் பெருமாள் கோயில் சென்றடையும். விழாவிற்கான ஏற்பாடுகளை கம்பம் யாதவ மகாசபை நிர்வாகிகள் செய்துள்ள னர்.