ADDED : பிப் 12, 2024 05:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: லோயர்கேம்ப் அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா தலைமை ஆசிரியை கவிதா தலைமையில் நடந்தது.
தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் கூடலுார் நகராட்சி தலைவர் பத்மாவதி பரிசு வழங்கினார். மாணவ மாணவிகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கவுன்சிலர்கள் தினகரன், மாயாண்டி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திருமாவளவன், மேலாண்மை குழு தலைவர் பாண்டியம்மாள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.