ADDED : ஜன 27, 2024 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி, : ஆண்டிபட்டி ஒன்றியம் சண்முகசுந்தரபுரம் ஊராட்சி தேனி மாவட்டத்தில் சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேனியில் நேற்று நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் ஷஜீவனா சிறந்த ஊராட்சிக்கான விருதை ஊராட்சி தலைவர் ரத்தினத்திடம் வழங்கினார்.
சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ள சண்முகசுந்தரபுரம் ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், தன்னார்வ அமைப்புகள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

