sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கும்பாபிஷேகம் இரு தரப்பினர் இடையே அமைதிக் கூட்டம்

/

கும்பாபிஷேகம் இரு தரப்பினர் இடையே அமைதிக் கூட்டம்

கும்பாபிஷேகம் இரு தரப்பினர் இடையே அமைதிக் கூட்டம்

கும்பாபிஷேகம் இரு தரப்பினர் இடையே அமைதிக் கூட்டம்


ADDED : ஜூன் 24, 2025 03:27 AM

Google News

ADDED : ஜூன் 24, 2025 03:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே மேல்மங்கலம் பட்டாளம்மன் முத்தையா கோயில் கும்பாபிஷேகத்தில் இரு தரப்பினரும் இணைந்து நடத்துவது என அமைதிக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

மேல்மங்கலத்தில் ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட பட்டாளம்மன் முத்தையா கோயில் உள்ளது.

42 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் 27ல் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. மேல்மங்கலம் அம்மாபட்டியைச் சேர்ந்த ஒரு தரப்பினர் தங்கள் சமுதாயத்தினருக்கு கோயில் கும்பாபிஷேகத்தில் உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என தர்ணாவில் ஈடுபட்டனர்.

அமைதிக் குழு கூட்டம்: கீழத்தெரு, அம்மாபட்டி தெரு சமுதாயத்தினரிடையே இப் பிரச்னைக்கு தீர்வு காண பெரியகுளம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் அமைதிக்குழு கூட்டம் சப்-கலெக்டர் ரஜத்பீடன் தலைமையில் நடந்தது.

தங்கதமிழ்செல்வன் எம்.பி., சரவணக்குமார் எம்.எல்.ஏ., அறநிலையத்துறை இணை ஆணையர் கார்த்திக், உதவி ஆணையர் ஜெயதேவி, செயல்அலுவலர் வேலுச்சாமி, டி.எஸ்.பி., நல்லு, தாசில்தார் மருதுபாண்டி, கீழத்தெரு, அம்மாபட்டி தெருவைச் சேர்ந்த சமுதாய முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.

கும்பாபிஷேகத்திற்கு யாகசாலை, பந்தல் அமைப்பதற்கு ஏற்படும் செலவு அனுமதி வழங்கப்பட்ட கீழத்தெருவைச் சேர்ந்த உபயதாரர் முத்துப்பாண்டி சம்மதத்தின்படி, அம்மாபட்டி தெரு மக்கள் வழங்கும் பாதி செலவு தொகையினை உபய தொகையாக செயல்அலுவலர் வழியாக, உபயதாரர் பெற்றுக்கொள்வது.

கும்பாபிஷேகம் விழாவிற்கு வாழைமரம், தோரணம் கட்டுவது மற்றும் நிகழ்ச்சி அட்டவணையை செயல்அலுவலர் பொறுப்பில் நடத்துவது, கும்பாபிஷேகத்தன்று கோபுர கலசத்திற்கு அர்ச்சகர்கள் மட்டுமே தண்ணீர் ஊற்றுவது, அவர்கள் மட்டுமே இருக்க வேண்டும்.

இரு சமுதாயத்தினரும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் முளைப்பாரி எடுக்க வேண்டும்.

ஜாதி அடையாளங்களை குறிக்கும் ஆடைகள் அணிந்து கோயிலுக்குள் வரக்கூடாது உட்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.--






      Dinamalar
      Follow us