/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சின்னமனுார் மாணிக்கவாசகர் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
/
சின்னமனுார் மாணிக்கவாசகர் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
சின்னமனுார் மாணிக்கவாசகர் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
சின்னமனுார் மாணிக்கவாசகர் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
ADDED : செப் 02, 2025 05:23 AM
சின்னமனுார், : சின்னமனூர் மாணிக்கவாசகர் கோயிலில் நாளை (செப்., 3ல்) மகா கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் துவங்கியது.
திருவாசகம் அருளிய மாணிக்கவாசகருக்கென தனிக் கோயில் சின்னமனுாரில் மட்டுமே உள்ளது. இந்த கோயிலில் மாணிக்கவாசகர் மூன்று மூலவர்களாக எழுந்தருளியிருப்பது தனிச் சிறப்பாகும். இக்கோயிலில் தெற்கு நோக்கி நின்ற நிலையில் இருக்கும் ஒற்றை சனீஸ்வர பகவான் பக்தர்களுக்கு கேட்ட வரம் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. 2012 ல் கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பது ஹிந்து மதக் கோட்பாடாகும். அதன்படி இக் கோயிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து சமய அறநிலைய துறை முடிவு செய்து உபயதாரர்கள் மூலம் பரம்பரை அறங்காவலர் மேற்பார்வையில் திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து மகா கும்பாபிஷேகத்திற்கான பூஜைகள் நேற்று காலை முதல் துவங்கியது . மூலவர் மற்றும் தெய்வங்கள் திருமேனியிலிருந்து திருக் குடங்களுக்கு எழுந்தருள செய்து, எண் வகை மருந்துகள் சாத்தப்பட்டது. தொடர்ந்து திருவிளக்கு வழிபாடு, புனித நீர் பூஜை, விநாயகர், திருமகள் வழிபாடு நடைபெற்றது. பின்னர் முதல் கால வேள்வி யாக பூஜைகள் நடைபெற்றது. இன்றும் தொடர்ந்து யாக வேள்வி பூஜைகள் நடைபெறுகிறது. நாளை காலை 9:30 முதல் 10:30 மணிக்குள் விமானங்கள் மற்றும் மூலமூர்த்திகளுக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை செயல் அலுவலர் நதியா, பரம்பரை அறங்காவலர் அண்ணாமலை திருவாசகம் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் செய்து வருகின்றனர்.