/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குமுளி பஸ் ஸ்டாண்ட் பணி ஒரு மாதத்தில் நிறைவடையும் - எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் தகவல்

ADDED : ஜூலை 01, 2025 03:24 AM

கூடலுார்: குமுளி பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப் பணிகள் இன்னும் ஒரு மாதத்திற்குள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ளது குமுளி, இங்குள்ள கேரள பஸ் ஸ்டாண்ட் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடியதாக உள்ளது.
அதேவேளையில் தமிழகப் பகுதியில் பஸ் ஸ்டாண்ட் வசதியின்றி ரோட்டிலேயே பஸ்கள் நிறுத்தப்பட்டு வந்தன. இதனால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
புது பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்காக ரூ.5.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2023 செப்.11ல் பூமி பூஜை நடத்தப்பட்டது. ஓராண்டிற்குள் முடிவடையும் என அறிவிக்கப்பட்ட இப்பணிகள் மந்தமாக நடந்து வந்தது.
விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இந்நிலையில் நேற்று தேனி எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் கட்டுமானப் பணியை பார்வையிட்டார். அவர் கூறும் போது, 'பணிகள் இன்னும் ஒரு மாதத்திற்குள் முடிவடைந்து விடும்.
சுற்றுச்சுவர், உயர் கோபுர விளக்கு ஆகியவை எம்.பி., நிதியிலிருந்து அமைப்பதற்காக ஆய்வு செய்ய வந்தேன். விரைவில் நிதி ஒதுக்கீடு செய்து அப்பணியும் முடிவடையும். பஸ் ஸ்டாண்டிற்கு கண்ணகி பெயரா, பென்னிகுவிக் பெயரா என்பதை அரசு முடிவு செய்யும்' , என்றார்.