ADDED : ஜூன் 17, 2025 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி; சக்கம்பட்டியை சேர்ந்தவர் கோட்டைகருப்பசாமி 65, கூலித் தொழிலாளி, இவருக்கு மனைவி, பிள்ளைகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் வேலை முடித்துவிட்டு ஆண்டிபட்டி - தெப்பம்பட்டி ரோடு சந்திப்பு அருகே தனது சைக்கிளை உருட்டிக்கொண்டு ரோட்டை கடந்தார்.
அப்போது தேனியில் இருந்து ஆண்டிபட்டி வழியாக இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற மதுரை செல்லூரைச் சேர்ந்த பால்பாண்டி என்பவர் கோட்டைகருப்பசாமி மீது மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
கோட்டைகருப்பசாமி மனைவி பாக்கியம் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.