/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி பலி
/
மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி பலி
ADDED : ஜூன் 19, 2025 03:15 AM
உத்தமபாளையம்: உத்தமபாளையம் திடீர் நகரை சேர்ந்தவர் ஈஸ்வரன் 31, இவர் தென்னை மரம் ஏறும் தொழிலாளி. இவருக்கு வித்யா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.
தனது பசுக்களுக்கு புல் அறுப்பதற்காக நேற்று அதிகாலை மலையடிவாரத்தில் உள்ள கொட்டை முந்திரி தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
காட்டுப் பன்றிகள் உள்ளே வருவதை தடுக்க தோட்ட உரிமையாளர் கொட்டை முந்திரி தோட்டத்திற்குள் ஒரு அடிக்கு மேல் மின்வேலி அமைத்துள்ளார்.
புல் அறுத்து கொண்டிருந்த ஈஸ்வரன், தெரியாமல் மின் கம்பியை தொட்ட போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளார்.
அங்கு வேலைக்கு சென்றவர்கள், ஈஸ்வரன் இறந்து கிடந்ததை பார்த்து குடும்பத்தினருக்கு தகவல் கூறினர். உத்தமபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
இறந்தவரின் உறவினர்கள் இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும், தோட்ட உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி அரசு மருத்துவமனை முன்பு உத்தமபாளையம் - கம்பம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். அரைமணிநேரம் போக்குவரத்து பாதித்தது.
போலீசார் பேச்சு வார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்.