/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த கூலித்தொழிலாளி
/
கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த கூலித்தொழிலாளி
ADDED : செப் 18, 2025 06:33 AM
கம்பம் : கம்பம் புதுப்பட்டி சாஸ்தா கோயில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் கோபி 31, கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு ஊத்துக்காடு பகுதியில் வேலையை முடித்து விட்டு, தனது நண்பர்களுடன் புதுப்பட்டிக்கு டூவிலரில் வந்துள்ளார்.
அப்போது புதுப்பட்டிக்கும் ஊத்துக் காட்டிற்கும் இடையே ரோட்டை கடந்த பாம்பின் மீது டூவீலர் ஏறியுள்ளது. உடனே பாம்பு சுரேஷ் கோபியை கடித்துள்ளது. அதே இடத்தில் நண்பர்களுடன் சேர்ந்து பாம்பை பிடித்து கொண்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தனர்.
கடித்த பாம்புடன் கூலி தொழிலாளி வருவதை பார்த்து ஊழியர்களிடம் பரபரப்பு ஏற்பட்டது . பாம்பு கடிபட்ட சுரேஷ் கோபிக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தேனி மருத்தவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.