/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மருத்துவமனை மன நோயாளிகளுக்கு பற்றாக்குறையான உணவு: பழைய ஸ்கேன் இயந்திரம் வைத்து முறைகேடு ஆய்வு செய்த உறுதி மொழிக்குழு அதிருப்தி

ADDED : ஜூலை 11, 2025 03:11 AM
தேனி: தேனி மாவட்டத்தில் சட்டசபை உறுதி மொழிக்குழுவினர் ஆய்வில் தேனி அரசு மருத்துவமனையில் மன நோயாளிகளுக்கு பற்றாக்குறை உணவு வழங்கியதும், பெரியகுளம் மாவட்ட மருத்துவமனையில் புதிய ஸ்கேன் இயந்திரத்திற்கு பதிலாக பழைய ஸ்கேன் இயந்திரம் பயன்பாட்டில் இருப்பதை அறிந்து குழுவின் தலைவர் வேல்முருகன் அதிருப்தி அடைந்தார்.
தேனி மாவட்டத்தில் நேற்று சட்டசபை உறுதிமொழிக் குழு தலைவர் பண்ருட்டி எம்.எல்.ஏ., வேல்முருகன் தலைமையில் உறுப்பினர்கள் அரவிந்த்ரமேஷ், அருள், மணி, மாங்குடி, மோகன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் தேனி சமதர்மபுரத்தில் மாவட்ட மனநல மருத்துவமனை, பொம்மையக்கவுண்டன்பட்டி அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி, பெரியகுளம் மாவட்ட அரசு பொது மருத்துவமனை, குச்சனுார் கோயில் ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தினர். ஆய்வில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங், டி.ஆர்.ஓ., மகாலட்சுமி, பெரியகுளம் சப்கலெக்டர் ரஜத்பீடன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேனி மனநல மருத்துவமனையில் ஆய்வு செய்த குழு தலைவர் வேல்முருகன், ' வளாகத்தை கலெக்டர், டீன், தொகுதி எம்.எல்.ஏ., ஆகியோர் சுத்தம் செய்ய கூறியும்நடவடிக்கை இல்லை. இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். மருத்துவக் கல்லுாரி துப்புரவு பணியாளர்களில் 50 பேரை அழைத்து சுத்தம் செய்து ஆய்வு கூட்டத்தில் புகைப்படம் காண்பிக்க அறிவுறுத்தினார். நோயாளிகள் வார்டில் இருந்து கேன்டீனுக்கு சென்று, அங்கு பற்றாக்குறையாக இருந்த உணவை பார்த்துவிட்டு, மனநலம் பாதிக்கப்பட்ட நபருக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவில் சாப்பாடு வழங்க வேண்டும் என விதிஉள்ளது. ஆனால் இங்குள்ள சாப்பாடு பற்றாக்குறையாக உள்ளது. இதை 33 பேருக்கு எவ்வாறு உணவு வழங்குவீர்கள் என கடிந்து கொண்டார். இதற்கு நிலைய மருத்துவர் விளக்கம் அளிக்க டீன் முத்துசித்ராவிடம் தெரிவித்தார்.