/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விவசாய வேலைக்கு தொழிலாளர்கள் கிடைக்காமல் திண்டாட்டம்
/
விவசாய வேலைக்கு தொழிலாளர்கள் கிடைக்காமல் திண்டாட்டம்
விவசாய வேலைக்கு தொழிலாளர்கள் கிடைக்காமல் திண்டாட்டம்
விவசாய வேலைக்கு தொழிலாளர்கள் கிடைக்காமல் திண்டாட்டம்
ADDED : அக் 26, 2024 07:00 AM
ஆண்டிபட்டி: மாவட்டத்தில் பருவமழை துவங்கியுள்ள நிலையில் விவசாய பணி செய்ய போதிய தொழிலாளர்கள் கிடைக்காமல் விவசாயிகள் திண்டாடுகின்றனர். இதனால் வேளாண் பணிகள் விறுவிறுப்பின்றி உள்ளது என விவசாயிகள் புலம்புகின்றனர்.
விவசாயத்தை முக்கிய தொழிலாக உள்ள ஆண்டிபட்டி தாலுகாவில் தற்போது பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. நூற்றுக்கணக்கான ஏக்கர் மானாவாரி நிலங்களில் சிறு தானியம், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி உள்ளிட்டவை விதைப்பு செய்கின்றனர்.
நூற்றுக்கணக்கான ஏக்கர் இறவை பாசன நிலங்களில் நெல் சாகுபடி செய்யவும், காய்கறிகள் சாகுபடிக்கும் விவசாயிகள் நிலங்களை தயார் செய்து வருகின்றனர். விவசாய பணிகளில் உழவு செய்தல், பாத்தி அமைத்தல், விதைப்பு, களை எடுத்தல், மருந்து தெளித்தல் போன்ற முன்னேற்பாடு பணிகளுக்கு கூலி ஆட்கள் அதிக எண்ணிக்கையில் தேவைப்படுகின்றனர்.
சொந்தமாக நிலம் உள்ள சிறு, குறு விவசாயிகள் கூலி ஆட்கள் இன்றி உற்றார் உறவினர்கள் உதவியுடன் விவசாயத்தை தொடர்கின்றனர். அதிக நிலம் வைத்துள்ள பெரிய விவசாயிகள் விவசாய பணிகளுக்கு கூலி ஆட்களையே நம்பியே உள்ளனர். பருவமழையால் அனைத்து கிராமங்களிலும் ஒரே நேரத்தில் விவசாய பணி நடப்பதால் கூலி ஆட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. வெளியூர்களில் இருந்தும் கூலி ஆட்களை வரவழைக்க முடியவில்லை. இதனால் விவசாய பணிகளில் மந்த நிலை நிலவுகிறது.
விவசாயிகள் கூறியதாவது:
மேலும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் சில மணி நேரங்கள் வேலை செய்தாலே பயனாளிக்கு தினமும் ரூ.320 சம்பளமாக கிடைக்கிறது. இதனால் ஒவ்வொரு ஊராட்சியிலும் 100 முதல் 300 பேர் வரை தேசிய ஊரக வேலை திட்டத்திற்கு ஆர்வமாக சென்று பணிகளை மேற்கொள்கின்றனர். இதனால் விவசாய பணிகளுக்கு ஆட்கள் வருவதில்லை.
திட்டமிட்ட நாளில் விதைப்பு, உரமிடுதல், களை எடுத்தல் போன்ற பணிகளில் பாதிப்பு ஏற்படுகிறது.
இன்னும் மூன்று மாதத்திற்கு விவசாய பணிகளுக்கு ஆட்களின் தேவை அதிகம் இருக்கும். ஆட்கள் பற்றாக்குறையால் முழுமையான விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் பலரும் திண்டாடுகின்றனர். தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பயனாளிகளை விவசாய பணிகளிலும் ஈடுபடுத்த அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.