sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ரோடு, சாக்கடை வசதியின்றி தெருவில் தேங்கும் மழைநீர் ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் அடிப்படைவசதிக்கு தவிப்பு

/

ரோடு, சாக்கடை வசதியின்றி தெருவில் தேங்கும் மழைநீர் ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் அடிப்படைவசதிக்கு தவிப்பு

ரோடு, சாக்கடை வசதியின்றி தெருவில் தேங்கும் மழைநீர் ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் அடிப்படைவசதிக்கு தவிப்பு

ரோடு, சாக்கடை வசதியின்றி தெருவில் தேங்கும் மழைநீர் ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் அடிப்படைவசதிக்கு தவிப்பு


ADDED : ஜன 09, 2024 05:50 AM

Google News

ADDED : ஜன 09, 2024 05:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : தேனி ஒன்றியம், ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட 12 வது வார்டில் ரோடு, சாக்கடை வசதி இல்லாததால் மழைநீர் தெருவில் குளம்போல் தேங்குவதால் பொதுமக்கள் சிரமப்படுவதாக பொதுமக்கள் புலம்புகின்றனர்.

தேனி ஒன்றியம், ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. 12வது வார்டில் உள்ள அன்னஞ்சி கிழக்குத்தெருவில் முதல் மற்றும் 2வது தெருக்கள் உள்ளது. இந்த தெருவில் சாக்கடை, ரோடு, தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதியினை ஊராட்சி நிர்வாகம் இதுவரை செய்து தரவில்லை.

இப்பகுதி மக்கள் அடிப்படை வசதி நிறைவேற்றித்தர கோரி அதிகாரிகள், ஊராட்சி பிரதிநிதிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் மழை பெய்தால் தெருக்களில் நீர் நிரம்பி தீவுபோல் காட்சியளிக்கும்.

இத் தெருவிற்கு அருகே வடபுதுப்பட்டி பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து குறிப்பிட்ட துாரம் வரை வடபுதுப்பட்டி ஊராட்சி சார்பில் சிமென்ட் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.

ஊஞ்சாம்பட்டி ஊராட்சி சார்பில் ரூ.5.25 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார வளாகம் முறையான பராமரிப்பு இல்லாததால் பயன்பாடு இன்றி உள்ளது.

வீடுகளுக்கு 'ஜல்ஜீவன்' திட்டத்தில் குழாய்கள் இணைப்பு கொடுக்கப்பட்டாலும் இதுவரை குடிநீர் வழங்கப்பட வில்லை. குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. அப்பகுதியில் பொதுமக்கள் கூறியதாவது:

ரோடு இன்றி கீழே விழும் நிலை


பெருமாள், கிழக்குத்தெரு, ஊஞ்சாம்பட்டி:12வது வார்டில் ரோடு அமைக்காததால் பல இடங்களில் பள்ளங்கள் உள்ளன. ரோடு வசதி இல்லாததல் முதியோர்,குழந்தைகள் தடுமாறி விழும் நிலை உள்ளது.

மேலும் இப்பகுதி தாழ்வாக உள்ளதால் மழைநீர் குளம் போல் தேங்குகிறது. சாக்கடை வசதி இல்லாததால் ரோட்டில் கழிவு நீர் செல்லும் நிலை உள்ளது. சாக்கடை வசதியும் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இருள் சூழ்ந்து காணப்படும்


தங்கவேல், கிழக்குத்தெரு, ஊஞ்சாம்பட்டி:இப்பகுதியில் தெருவிளக்குகள் இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. ஆங்காங்கே புதர் மண்டியுள்ளதால் விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகம். குழந்தைகளை வைத்துள்ளவர்கள் இரவு நேரத்தில் வீடுகளை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர்.

ரோட்டில் சாக்கடை கழிவு நீர் தேங்குவதால் கொசு தொந்தரவு தாங்க முடிவதில்லை. ஊராட்சி இப்பகுதியில் கொசு மருந்துகூட தெளிப்பது இல்லை.

குப்பை அப்புறப்படுத்தவும், வீடுகளில் குப்பை வாங்கிட பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் நீண்டதுாரம் சென்று குப்பையை தொட்டியில் போடுகின்றனர்.

குடிநீருக்கு அடுத்த ஊராட்சியை நாடல்


ராமகிருஷ்ணன், கிழக்குத்தெரு, ஊஞ்சாம்பட்டி:இப்பகுதியில் ஊஞ்சாம்பட்டி ஊராட்சி சார்பில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டன. ஆனால் அதில் குடிநீர் வழங்குவதில்லை. எனவே,குடிநீரை அருகில் உள்ள வடபுதுப்பட்டி ஊராட்சியில் எடுத்து வரும் நிலை உள்ளது.

சில நேரங்களில் அந்த குடிநீரும் கலங்கலாக வினியோகம் செய்யப்படுகிறது. போர் தண்ணீர் குடித்தால் உடல்நிலை பாதிக்கும் அபாயமும் உள்ளது. வீடுகளுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அடிப்படை வசதிக்கு ஆய்வு


பாண்டியம்மாள், தலைவர், ஊஞ்சாம்பட்டி ஊராட்சி: ஊஞ்சாம்பட்டி கிழக்கு தெரு விரிவாக்க பகுதியில் ரோடு, சாக்கடை அமைப்பதற்காக ஆய்வுப்பணிகள் முடிந்துள்ளது.

'ஜல்ஜீவன்' திட்டத்தில் ஊராட்சி முழுவதும் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இலவச குடிநீர் இணைப்பு என பொதுமக்கள் கருதி அத்திட்டதிற்கான பங்களிப்புத்தொகை, குடிநீர் கட்டணம் செலுத்த மறுக்கின்றனர். இதனால் சில பகுதிகளுக்கு மட்டும் அத்திட்டத்தில் குடிநீர் வழங்க இயலாமல் உள்ளது.






      Dinamalar
      Follow us