/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஊராட்சிகளில் நிரந்த துாய்மைப் பணியாளர்கள் பற்றாக்குறை: கிராமங்களில் கேள்விக்குறியாகும் பொது சுகாதாரம்
/
ஊராட்சிகளில் நிரந்த துாய்மைப் பணியாளர்கள் பற்றாக்குறை: கிராமங்களில் கேள்விக்குறியாகும் பொது சுகாதாரம்
ஊராட்சிகளில் நிரந்த துாய்மைப் பணியாளர்கள் பற்றாக்குறை: கிராமங்களில் கேள்விக்குறியாகும் பொது சுகாதாரம்
ஊராட்சிகளில் நிரந்த துாய்மைப் பணியாளர்கள் பற்றாக்குறை: கிராமங்களில் கேள்விக்குறியாகும் பொது சுகாதாரம்
ADDED : நவ 07, 2024 02:17 AM
தேனி: மாவட்டத்தில் பெரும்பாலான ஊராட்சிகளில் போதிய அளவில் நிரந்தர துாய்மைப்பணியாளர்கள் இல்லாததால் துப்புரவு பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கிராமங்களில் பொது சுகாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.
மாவட்டத்தில் 130 ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சியிலும் காலமுறை ஊதியம் பெறும் நிரந்தர துாய்மைப்பணியாளர்களும், இவர்களுடன் காவலர்களும் பணியில் அமர்த்தி துாய்மைப்பணிகள் மேற்கொள்ள வேண்டும். 130 ஊராட்சிகளில் மொத்தம் 200 காலமுறை ஊதியம் பெறும் துாய்மை பணியாளர்கள் இருக்க வேண்டும். தற்போது 100க்கும் குறைவாக நிரந்தர பணியாளர்கள் ஒருசில ஊராட்சிகளில் உள்ளனர். பெரும்பாலான ஊராட்சிகளில் நிரந்தர பணியாளர்கள் இல்லை. ஏனெனில் காலமுறை ஊதியம் பெறும் துாய்மை பணியாளர்களுக்கு அரசு நிர்ணயித்த சம்பளம் கூட ஊராட்சி நிர்வாகங்கள் வழங்குவதில்லை. இப் பணியாளர்கள் ஓய்வுக்கு பின் காலிப்பணியிடங்ளை நிரப்புவது இல்லை. மேலும் கிராம விரிவாக்கத்தால் குப்பை அதிகரிப்பு, வேலை பளு அதிகம் என கூறி பணியாளர்கள் பலர் பணிக்கு வருவதில் ஆர்வம் காட்டுவதில்லை. தற்போது தற்காலிக பணியாளர்கள் அதிகம் உள்ளனர்.
சில ஊராட்சிகளில் துாய்மை பணிக்கான உபகரணங்கள் கூட வழங்குவதில்லை. இதனால் பணியில் இருக்கின்ற தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர். இச் சூழலால் பல கிராமங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும், மக்காத குப்பை பிரிக்கும் கிடங்குகள், உர செயலாக்க மையங்கள் பயன்பாடு இன்றி போனது. முறையாக துாய்மை பணி நடைபெறாததால் கொசுக்களை கட்டுப்படுத்த மருந்து தெளித்தல், கழிவுநீர் அகற்றம், தெருக்கள் துாய்மை பணி உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஊராட்சியிலும் பல இடங்களில் குப்பை குவிந்துள்ளன. இவற்றிற்கு தீ வைத்து விடுகின்றனர்.
இதனால் அப்பகுதிகளில் குடியிருப்போர் சுவாச கோளாறு, அலர்ஜியால் பாதிக்கப்படுகின்றனர். மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் போதிய அளவில் துாய்மைப்பணியாளர்களை நியமிக்கவும், அவர்களுக்கு தேவையான உபகரணங்கள், உதவிகளை வழங்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.