/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குரங்கணி மலைப்பாதையில் 5 இடங்களில் மண் சரிவு
/
குரங்கணி மலைப்பாதையில் 5 இடங்களில் மண் சரிவு
ADDED : நவ 04, 2024 06:36 AM

போடி; தேனி மாவட்டம், கொட்டக்குடி ஊராட்சிக்குட்பட்ட கடைக்கோடி கிராமமாக தமிழக, கேரளா எல்லை பகுதியில் உள்ளது டாப் ஸ்டேஷன். போடியில் இருந்து, 18 கி.மீ., துாரம் குரங்கணி வரை ரோடு வசதி உள்ளது. அங்கிருந்து, 22 கி.மீ., துாரத்தில் டாப் ஸ்டேஷன் உள்ளது. குரங்கணி, கொட்டக்குடி, முட்டம், முதுவாக்குடி, சென்ட்ரல், டாப் ஸ்டேஷன் உட்பட மலைக்கிராமங்களும் உள்ளன.
குரங்கணியில் இருந்து டாப் ஸ்டேஷன் செல்லும் ரோட்டில் சாம்பலாறு வரை ஜீப், கார், டூ - வீலர் உட்பட வாகனங்கள் செல்லும். தொடர் மழையால் குரங்கணி மலைப்பாதையில் ஐந்து இடங்களில் நேற்று மண்சரிவு ஏற்பட்டது. மரங்கள் வேருடன் சாய்ந்தும், பாறைகள் உருண்டும் ரோட்டில் விழுந்தன.
இதனால் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல முடியாதபடி ஐந்து மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பாறை, மரங்களை அகற்றிய பின் போக்குவரத்து சீரானது. இதனால், சுற்றுலா பயணியர் அவதிக்குள்ளாயினர்.