/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியகுளத்தில் டார்லிங் கிளை துவக்கம்
/
பெரியகுளத்தில் டார்லிங் கிளை துவக்கம்
ADDED : செப் 21, 2024 06:17 AM

--பெரியகுளம்: பெரியகுளத்தில் டார்லிங் 143 வது கிளை துவங்கப்பட்டது. ஏராளமானோர் குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்களை வாங்கி சென்றனர்.
வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக டார்லிங் நிறுவனம் திகழ்கிறது.
இந்த நிறுவனத்தின் கிளை பெரியகுளம் தென்கரை மெயின் ரோட்டில் பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஷோரூமினை கட்டட உரிமையாளர் சாராபேகம், வெற்றி முஸ்தபா திறந்து வைத்தார்.
நிறுவன பங்குதாரர் ஜேம்ஸ் வரவேற்றார். பெரியகுளம் வியாபாரிகள் சங்க தலைவர் மணிவண்ணன், தென்கரை வர்த்தக சங்க தலைவர் சிதம்பரசூரியவேலு, செயலாளர் சீத்தாராமன், வர்த்தக பிரமுகர்கள் கவிதா மார்த்தாண்டம், செந்தில், பெரியகுளம் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நிஜாத் ரகுமான் உட்பட பலர் பங்கேற்றனர். முதல் விற்பனையை ஹையர் அப்ளையன்ஸ் துணை பொது மேலாளர் (விற்பனை) ஆறுமுகம் துவக்கி வைத்தார்.
திறப்பு விழாவை முன்னிட்டு ரூ.20 ஆயிரத்துக்கு மேல் பொருட்கள் வாங்கியவர்களுக்கு தங்க நாணயம் இலவசமாக வழங்கப்பட்டது. ஸ்மார்ட் போன் வாங்கியவர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச், பவர் பேங்க், இயர்பேடு வழங்கப்பட்டது.
32 இன்ச் ஸ்மார்ட் டி.வி., தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டது. குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யவும், இ.எம்.ஐ., வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.