ADDED : அக் 23, 2024 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : கலெக்டர் அலுவலகம் முன்பு பழனிசெட்டிபட்டி வண்ணார் சமூக நலச்சங்க செயலாளர் மணிமாறன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவில், பழனிசெட்டிபட்டியில் சலவை செய்யும் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும், தனிநபர் சலவை தொழில் செய்யும் பகுதியில் ஆட்களை வைத்து தாக்க முயன்றார்.
இதுபற்றி பழனிசெட்டிபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
தொழில் செய்ய பாதுகாப்பு வழங்க கோரினர். ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள் துணி மூட்டைகளுடன் பங்கேற்றனர்.

